திருச்சி, டிச. 3- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவ னத் தலைவர் தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்தநாள்விழா சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழாவாக 01.12.2023 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் கொண்டாடப் பட்டது.
முதல் நிகழ்வாக காலை 9 மணியளவில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் மரம் நடும் விழா நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து காலை 9.30 மணியளரில் செஞ்சுருள் சங்கத் தின் சார்பில் திருச்சி அண்ணல் காந்தி அரசு பொதுமருத்துவ மனையின் குருதி வங்கி மருத்து வர் சிவ. இளத்கோவன், பயிற்சி மருத்துவர் டுபீனா, குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்ற குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.
இக்குருதிக்கொடை முகா மில் மருந்தாக்கவியல் துறையின் பேராசிரியர் முனைவர் இரா. இராஜகோபாலன் மற்றும் மாணவர்கள் உட்பட 16 பேர் குருதிக் கொடை செய்து உயிர் காக்கும் மனிதநேயப் பணிக்கு பேருதவிபுரிந்தனர்.
காலை 10 மணியரில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது. பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் பெரியார் நல வாழ்வு சங்கத்தின் செயலர் பேராசிரியர் க.அ.ச. முகமது ஷபீஃக் வரவேற்புரையாற்றி னார். திருச்சி கி.ஆ.பெ. விஸ்வ நாதம் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை முதுநிலை பேராசிரியர் மருத்துவர் எம். புவனேஸ்வரி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்த பல தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார். பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் முன்னிலை வகித்த இந் நிகழ்ச்சிக்கு மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் ஆர்.காயத்ரி நன்றியுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 11.30 மணியளவில் திராவிட மாணவர் போராட்ட நாளினை முன்னிட்டு திராவிடர் மாணவர் கழக உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மதியம் 12 மணியளவில் பெரியார் மன் றத்தின் சார்பாக “தமிழர் தலை வரின் பணிகளில் விஞ்சி நிற்பது: சமூகநீதிப் பணியே! இனமானப் பணியே !” என்ற தலைப்பில் சிந் தனைக்கு விருந்தளிக்கும் வகை யில் நடைபெற்ற பட்டிமன் றத்தை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை துவக்கி வைத்து திராவிட தமிழினத்தின் உயர்விற்காக தமது 91 வயதிலும் ஓய்வறியாது சமுதாயப்பணி களை தொடர்.ந்து செய்துவரும் இத்தகைய தலைவரின் வழிகாட் டுதலில் நாம் அனைவரும் பயணிப் பது நமக்கு கிடைத்த வாய்ப்பு, பெருமை என்று பெரு மிதத்துடன் உரையாற்றினார்.
இப்பட்டிமன்றத்தின் நடுவ ராக திராவிடர் கழக கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் பொறுப்பேற்றார். சமூகநீதிப் பணியே என்ற தலைப்பில் பேராசிரியர் க.அ.ச. முகமது ஷபீக் மற்றும் இளநிலை மருந் தியல் இரண்டாமாண்டு மாணவி ஜெ. அப்ரிதா ஆகியோர் சமூக நீதிப்பணியில் நம் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் சாதித் துக் காட்டிய மண்டல் ஆணை யத்தின் 27 சதவிகித இடஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கான 69 சதவிகித இடஒதுக்கீடு, வகுப்புவாரி உரி மைகள் குறித்து சிறப்பாக வாதிட் டனர். அதனைத் தொடர்ந்து இனமானப் பணியே! என்ற தலைப்பில் அ. ஷமீம் மற்றும் இளநிலை மருந்தியல் நான்கா மாண்டு மாணவி ரெ. இலக்கியா ஆகியோர் திராவிட தமிழினம் மற்றும் தமிழ்நாட்டின் இனமா னம் காக்க தந்தை பெரியார் வழியில் அவர்தம் கொள்கை வழித்தோன்றல் ஆசிரியர் அவர் கள் எவ்வாறு காத்து நிற்கிறார் என்பதனையும் நீட், புதிய கல்விக் கொள்கைகளை ஒழிக்க மேற்கொள் ளும் இனமானப் பணிகள் குறித்தும் பட்டியலிட் டனர்.
நிறைவாக நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் நடுவரு மான முனைவர் க. அன்பழகன், தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியார் காட்டிய இனமானப்பணிகளை அல்லும் பகலும் ஓய்வின்றி தொடர்ந்து செய்துவருகிறார் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் சமூக நீதியினை ஆசிரியர் அவர் கள் கையிலெடுத்த பிறகுதான் ஆரியக்கூட்டம் நடுங்க ஆரம்பித் தது என்று கூறி தமிழர் தலைவ ரின் பணிகளில் விஞ்சி நிற்பது : சமூகநீதிப் பணியே ! என்று தமது தீர்ப்பினை அறிவித்து, குருதிக்கொடை வழத்கியவர்க ளுக்கு பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கி சிறப்பித்தார்.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மன்ற செயலர் அ. ஷமீம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் அ.ஜெசிமா பேகம் ஒருங்கி ணைத்த குருதிக்கொடை முகா மில் குருதிக்கொடை வழங்கி பேருதவி புரிந்தமைக்கு பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு அண் ணல் காந்தி அரசு பொது மருத் துவமனையின் பாராட்டுச் சான் றிதழ் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment