பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் நிறுவனர் நாள் மற்றும் நிர்வாகக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 3, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் நிறுவனர் நாள் மற்றும் நிர்வாகக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா


தஞ்சை, டிச. 3-
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 02.12.2023 சனிக்கிழமை அன்று பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின்  91ஆவது பிறந்த நாள், நிறுவனர் நாள் விழா மற்றும் நிர்வாக கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கம் நடை பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா வரவேற்புரையாற்றும் போது, மேல்நிலைப்பள்ளி தேர் வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்க ளின், குடும்பத்தில் முதல் பட்ட தாரி மாணவர்கள் மற்றும் பல தரப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது. இவ்வாண்டு 2934 மாணவர்களுக்கு ரூபாய் 2 கோடியே 54 லட்சம்  வழங்கப் படுகிறது. இத்தொகை மாணவர் கள் படிப்பில் ஆர்வம் காட்டுவ தற்காகவும், அவர்களை ஊக்கப் படுத்துவதற்காகவும் வழங்கப் படுகிறது என்றும் கூறினார். மேலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வேலை கேட் காமல் வேலை கொடுப் போம் என்று சொல்லும் அளவிற்கு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றார்.   

பல்கலைக்கழக துணைவேந் தர் பேரா.செ.வேலுசாமி உரை யாற்றும்போது:ஒரு மனிதன் முன்னேறுவதற்கு பெற்றோர் களும் ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நமது பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணியின் பெற்றோர் மற்றும் அவருக்கு கிடைத்த திராவிட மணி என்ற ஆசிரியர் மாமனிதராக உருவாக்கியிருக் கிறார்கள். மாணவர்கள் பெற் றோர்களவீயும், ஆசிரியர்களை யும் மதிக்க வேண்டும் உங்களு டைய முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் அவர்கள் தான், என்று தனது உரையில் குறிப்பிட்டார். 

இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், சமூக நீதிக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது முதல் குரல் எழுப்பக் கூடியவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் குறிப் பிட்டார். நமது வேந்தர் அவர் கள் ஓய்வும் சோம்பலும் ஒரு துருவுக்கு சமமானது அந்த துரு எனது மனதில் பதிவதற்கு இடம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் அது வீரமணி மட்டுதான். நான் வீரமணியை சந்தித்துவிட்டு வரும்போது ஆயிரம் யானையின் பலத்தோடு  வருவேன். வீரமணி மிகப்பெரிய படிப்பாளி. தொடர்ந்து வாசித் துக்கொண்டே இருப்பார். நம் மையும் வாசிக்கத் தூண்டுவார்    

ஒரு கூட்டத்தில் பேசவேண் டும் என்றால் தயாரிப்புடன் வருவார். உரையை அச்சடித்து புத்தகமாகவே கொண்டு வந் ததை மலேசியாவில் பார்த்தேன். ஆசிரியர் வீரமணி பயணம் செய்யும் வாகனம் ஆம்புலன்சுக்கு இணையானது. சமூகநீதி அடி பட்டு கிடந்தால் இந்த ஆம் புலன்ஸ் உடனேவரும். 

ஜாதி - மதக்கலவரங்களில் பற்றி எரிந்தால் இந்த வாகனம்  தீயணைப்பு வாகனமாக வரும் என்றார். ஆசிரியர் வீரமணி பல் துறை அறிஞர். சிறந்த தலைவர், நல்ல பேச்சாளர், எழுத்தாளர், வழக்குரைஞர், பத்திரிகையாளர், போராளி என்று குறிப்பிட்டார். 

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உரையாற் றும் போது: இந்த மேடையில் நான் ஒரு மேயராக இருக்கிறேன் என்றால்  அதற்கு காரணம் திரா விடல் மாடல் தான். பெரியார், அண்ணா, முத்தமிழறிஞர் கலை ஞர் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.விரமணி, முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் போன்றவர் கள் தான் என்று கூறினார். என்றும் மாறாமல் ஒரு நிலை யான தன்மையை உடையவர் தான் நமது தமிழர் தலைவர். அவர்களின் பெரும் முயற்சியால் அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என்று குறிப்பிட்டார். இடஒதுக்கீடு எளிதாகக் கிடைத்துவிடவில்லை பல போராட்டங்கள் நடை பெற்று நாம் படிக்கும் உரிமை யைப் பெற்றிருக்கிறோம் என் றார். பின்னர் கல்வி உதவி தொ கையாக 2934 மாணவர்களுக்கு ரூபாய் 2 கோடியே 54 லட்சம்  வழங்கப்பட்டது.  

இறுதியாக நன்றியுரையினை பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய உதவிபேராசிரியர் எஸ்.சாம்ராஜா கூறினார்.

No comments:

Post a Comment