"தகைசால் தமிழர்" விருதாளர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

"தகைசால் தமிழர்" விருதாளர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - கருத்தரங்கம்

featured image

பெங்களூரு, டிச. 13- பெங்களூரு தமிழ்ச்சங்கம் மூன்றாம் தளம் திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் அரங்கில் 10.12.2023 அன்று காலை 10 மணிக்கு தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மிக எழுச் சியுடன் நடைபெற்றது.
விழாவிற்கு கருநாடக மாநிலத் தலைவர் மு.சானகிராமன் தலைமை யேற்க, பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம் வரவேற்புரை நிகழ்த் தினார்.
கழக கொடியினை தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் ஏற்றி வைத்தார். தந்தை பெரியார் அவர் களின் ஒளிப்படத்தினை சென்னை சோழிங்கநல்லூர் கழக மாவட்ட தலை வர் ஆர்.டி.வீரபத்திரன் திறந்து வைத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்.
நிகழ்வினை செ.குணவேந்தன் (வழக்குரைஞர் பிரிவு தலைவர்), ஆசிரியர் அவர்களைப் பற்றிய எழுச்சிக் கவிதை யுடன் உரை நிகழ்த்தினார். வழகுரைஞர் பிரிவு செயலாளர் ஜெ.அருண், சோழிங் நல்லூர் மாவட்ட செயலாளர் செய ராமன், மாநில பொருளாளர் கு.செயக் கிருட்டிணன், மாநில துணைத் தலை வர் பு.ர.கஜபதி, மாநில துணைத் தலை வர் நாடக செம்மல் வ.மு.வேலு, வடக்கு மண்டல செயலாளர் சி.வரதராசன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ், கழக செயல்வீரர் மு.ஆனந்தன் மற்றும் பலர் ஆசிரியர் அவர்களைப் பற்றி கருத்துரை வழங்கினர்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் அண்ணா சரவ ணன் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை, இடஒதுக்கீடு, இன்றைய இயக்க செயல்பாடுகள் மற்றும் சமூக நீதிக் காவலர் ஆசிரியர் என்ற தலைப் பில் அரிய கருத்துகளை கருத்தரங்கில் எழுச்சியுரையாற்றினார். நிறைவாக மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ நன்றியுரை நிகழ்த்தினார். இரா.பாஸ் கரன் அரங்கினை ஒழுங்குபடுத்தினார்.
தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராஜ் பெரியார் புரட்சிக் கருத் துகள் நிறைந்த ஒளிப்படத்தினை, இரா.முல்லைக்கோ, மு.ஜானகிராமன் ஆகியோர்களுக்கு பலத்த கரவொலிக்கு இடையே வழங்கி மகிழ்ந்தார். சோழங்க நல்லூர் கழக மாவட்ட செயலாளர் ஆர்.டி.வீரபத்திரன் கழக நிர்வாகிகளுக்கு பயனடை அணிவித்து சிறப்பித் தார்.
மதியம் அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்ட அரங்கின் கீழும் மேலும் தமிழர் தலைவரின் தலை மையில் வழங்கப்பட்ட பதாகைகளை பலகைகளில் ஒட்டி காட்சிப்படுத்தி னர்.
விழா தொடங்கு முன்னர் ஜெயலட் சுமி கஜபதி, சத்தியவாணி ஆனந்தன், பெரியார் பிஞ்சு அறிவழகன், மற்றும் மலர்விழி ஆகியோர்களும் பாஸ்கரன் இணையர் ரமணி, புவிச்சன் மற்றும் வியேஞ்சனாவும் கலந்து கொண்டு அனை வரையும் வரவேற்று சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியை தொடங்கும் முன்னர் அதே அரங்கில் கருநாடக மாநில செயற்குழு கூட்டம்-நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் தலைமையில் 2024ஆம் புதிய நிர்வாகிகள் தேர்வு ஒரு மனதாக நடைபெற்றது.

மாநிலத் தலைவர்: மு.சானகிராமன்
துணைத் தலைவர்: சேகுணவேந்தன், பு.ரா.கஜபதி
செயலாளர்: இரா.முல்லைக்கோ
துணை செயலாளர்: கு.ஆனந்தன்
காப்பாளர்: வீ.மு.வேலு
பொருளாளர்: கு.செயகிருட்டிணன்
நிறைவாக புதிய நிர்வாகிகளுக்கு ஆர்.டி.வீரபத்திரன் பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, நன்றி கூறினார்.

No comments:

Post a Comment