முத்தமிழ் திராவிடத்தாய் மடிதவழ்ந்த
மூதறிஞர் கி.வீரமணி-ஆசிரியர் மண்ணுதித்த
தித்திக்கும் பிறந்தநாளில் சிரமுயர்த்தி - வாழ்த்துகிறேன்..
திராவிடர்கள் உலகோரின் மூளை விலங்குடைத்த - போராளியே!
பத்தொன்பதின் இளைஞனாய் பவனிவரும் - பகுத்தறிவு பகலவனே!
பசுந்தமிழர் "நீதியாட்சி" அடித்தளமே - உமக்கு
எத்தனை பிறந்தநாள் இனிவரினும்
எப்போதும் பிறந்தாண்டே "நூறு" - என வாழ்த்துவதால்
இணையருடன் இருநூறாய் தொடர்ந்திடவே-இதய வாழ்த்து!
நித்தமும் பெரியாரின் சிந்தனையை-உலகின்
நிலம்யாவும் விதைத்திடும் பகுத்தறிவு-நன்செயல்-உழவனே!
மொத்தமாய் பார்ப்பனிய-பாசிச சனாதன களை ஒழிக்கும் போராளியே!
மோதிடும் "சமூகநீதி" காத்திடும்-ஏவுகணையே!
அத்தனை மனிதனும் சமத்துவம் பெற்றிட
அனைத்து ஜாதியோர் அர்ச்சகராக்கிய-நீங்கள்
வித்தாய் விதைத்த பெரியாரியலே-இன்று-உலகே
விரும்பிடும் நீதியாட்சி திராவிட-மாடலாட்சி
எத்தனைதான் அறிவியலார்படைப்பு இருந்தென்ன?
எல்லோர்க்கும் சுகவாழ்வு-சுதந்திரம் தந்தது-பொரியாரியலே...
மூத்தவர் திராவிட-தமிழனே பிறப்பால்-அறிவால்-உலகிலிதை
முந்திவிட இன்றுவரை எவருமே பிறந்திட வில்லை
பத்துவயதின் பகுத்தறிவு படைப்பாளி - ஆசிரியர்
பார்போற்றும் கி.வீரமணி பேருழைப்பும், சிந்தனையும்
பல்லாண்டு தொடர்ந்திட நலம் வாழ இதயவாழ்த்து
பகுத்தறிவு கவிஞர் அமிர்தம்,
வாழப்பாடி
No comments:
Post a Comment