ராய்ப்பூர், டிச. 8- சத்தீஸ்கர் சட்டப்பேர வைக்கு அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 90 பேரில் 17 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது, அவர்கள் வேட்புமனுவுடன் சமர்ப் பித்த பிரமாணப் பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் 6 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.
சட்டமன்ற உறுப்பினர்களில் 72 பேர் பெரும் பணக்காரர்கள். குற்ற வழக்குகள் மற்றும் பணக் காரர்கள் என இரண்டு பட்டியலி லும் பாஜக சட்டமன்ற உறுப்பி னர்களே அதிகம் இடம்பெற்றுள் ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அண் மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பாஜக 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித் தது.
கடந்த 2018 தேர்தலில் 68 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கோண்ட்வானா கணதந்திர கட்சி (ஜிஜிபி) ஓரிடத் தில் வெற்றிபெற்றது. மாநில மேனாள் முதலமைச்சர் அஜீத் ஜோகி தொடங்கிய ஜனதா காங் கிரஸ் சத்தீஸ்கர் (ஜெ) கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
தற்போது மாநில சட்டப்பேர வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 90 சட்டமன்ற உறுப்பினர்களில் 17 பேர் மீது (19%) குற்ற வழக்குகள் இருப்பது சத்தீஸ்கர் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடி ஆர்) என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:
குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ள 17 சட்டமன்ற உறுப்பினர்களில், 12 பேர் (22%) பாஜகவைச் சேர்ந்தவர்கள், 5 பேர் (14%) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்கள்.
இதில் பாஜக சட்டமன்ற உறுப் பினர்கள் 4 பேரும் (7%), காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேரும் (6%) தங்கள் மீது பிறரை தாக்கி காயப்படுத்துதல், மிரட்டு தல் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்கு கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற, மாநில முதல் வர் பதவியிலிருந்து விலகும் சேர்ந்த பூபேஷ் பகேல் (பதான் தொகுதி), தேவேந்திர யாதவ் (பிலாய் நகர்), அடல் சிறீவாஸ்தவ் (கோட்டா) ஆகியோர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
அதுபோல, பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள மாநில மேனாள் அமைச் சர்கள் ராஜேஷ் முனத் (ராய்பூர் நகரம் மேற்கு), தயாள்தாஸ் பகேல் (நவகர்), சகுந்தலா சிங் போர்டே (பிரதாப்பூர்), உத்தேஸ்வரி பைக்ரா (சாம்ரி), ஓ.பி.சவுதரி (ராய்கர்), விஜய் சர்மா (கவர்தா), விநாயக் கோயல் (சித்ரகூட் – எஸ்டி), ஆஷ்ரம் நேதாம் (கன்கெர்-எஸ்டி) ஆகியோர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
முந்தைய 2018 தேர்தலின்போது 90 சட்டமன்ற உறுப்பினர்களில் 24 பேர் (27%) தங்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித் திருந்தனர். அவர்களில் 13 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் இருந்தன.
72 பேர் பெரும்பணக்காரர்கள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 சட்டமன்ற உறுப்பினர்களில் 72 பேர் பெரம் பணக்காரர்கள் என்பதும் அவர்கள் சமர்ப்பித்த வேட்புமனு மூலம் தெரியவந்து உள்ளது.
இதில் பாஜகவைச் சேர்ந்த 43 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர். அதுபோல, காங்கி ரஸைச் சேர்ந்த 29 சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும் பணக்கா ரர்கள் ஆவர்.
தற்போது வெற்றிபெற்ற 90 சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.5.25 கோடியாக உள்ளது. இது கடந்த 2018 தேர்தலில் ரூ.11.63 கோடியாக இருந்தது.
பெரும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் ரூ. 33.86 கோடி சொத்துக்களுடன் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான பவன் போரா (பண்டாரியா தொகுதி) உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, காங்கிர ஸைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறும் பூபேஷ் பகேலுக்கு ரூ.33.38 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. மூன் றாவது இடத்தில் பாஜகவின் அமர் அகர்வால் ரூ.27 கோடி சொத்துகளுடன் உள்ளார்.
60% பட்டதாரிகள்
90 சட்டமன்ற உறுப்பினர்களில் 33 பேர் (37%) 5 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித் துள்ளனர். 54 பேர் (60%) பட்டப் படிப்பு அல்லது உயர்கல்வி முடித் துள்ளனர். இருவர் பட்டையப் படிப்பு முடித்துள்ளனர். ஒருவர் எழுத்தறிவு மட்டுமே உள்ளதாக அறிவித்துள்ளார்.
50 வயதுக்கு உள்பட்ட 44 சட்டமன்ற உறுப்பினர்கள்
வெற்றிபெற்றவர்களில் 44 பேர் 25 முதல் 50 வயதுக்கு உள்பட்ட வர்கள். 46 பேர் 51 முதல் 80 வயதுக்கு உள்பட்டவர்கள்.
No comments:
Post a Comment