டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
⇒ தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஆறு வாக்குறுதி களை நிறைவேற்ற முதல் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்தார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்.
⇒ ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களை தடை செய்ய முடியாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டிப்பு.
⇒ தெலங்கானாவில் இந்திரா ராஜ்யம். பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், முதலமைச்சர் ரேவந்த் அறிவிப்பு.
⇒ இணையதளத்தில் காட்சிப்பதிவு வைரல்; பிரதமர் மோடி முன் கைகூப்பி குனிந்து நிற்கும் குடியரசு துணைத் தலைவர் வலியும், வேதனையும் தருவதாக விளக்கம்
⇒ திரிணாமுல் எம்.பி.மஹூவா குறித்த நாடாளுமன்ற குழு அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
⇒குடிமைப் பணி தேர்வுகளை இந்தியாவின் 22 அலுவல் மொழிகளிலும் ஏன் நடத்தக் கூடாது – ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.
⇒ தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் நிவாரணம்; கேட்டது ரூ.5,060 கோடி, கிடைத்தது வெறும் ரூ.450 கோடி: ஒன்றிய அரசு அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
⇒ 29% உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன, நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்.
தி டெலிகிராப்:
⇒கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது பணிகளை சரிவரச் செய்யவில்லை – முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.
⇒சிபிஎம் கருத்துப்படி, மென்மையான ஹிந்துத்து வாவில் ஈடுபடுவதைத் தவிர, காங்கிரஸ், மூன்று ஹிந்தி பெல்ட் மாநிலங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்த தால் தோல்வியடைந்தது.
⇒ நக்சல்பாரி இயக்கத்தில் இருந்த அனுசுயாக்கா தற்போது தெலங்கானா அமைச்சராக பதவியேற்பு.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment