லக்னோ, டிச. 22- உத் தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் சீலிடப் பட்டு வைத்திருந்த வாக்குப்பதிவு கருவிகள் தீயில் கருகி நாசமானது.
உத்தரப்பிரதேச சட் டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அழிந்தன.
2020ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த மாநிலத்தேர்தலில் சில சட்டமன்ற தொகுதி களில் முறைகேடு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மீது எழுந்த அய்யம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் பருக் காபாத்தில் உள்ள மின் னணு வாக்குப்பதிவு கரு விகள் வைக்கப்பட்ட அறையில் தீடிரென தீப் பிடித்துள்ளது.
இந்த தீ விபத்தில் 800க்கும் மேற்பட்ட மின் னணு வாக்குப்பதிவு கரு விகள் முழுவதும் தீயில் கருகியது _ மேலும் சில ஆயிரம் கருவிகள் பழு தாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு தொகுதிகளில் மக்களின் வாக்குகளை தன்னுள் வைத்திருக்கும் இந்தக் கருவிகள் தீயில் கருகியதால் அனைத்து பதிவுகளும் முற்றிலும் அழிந்துவிட்டன.
இனி அதில் பதிவான வாக்குகளை மீண்டும் பெற முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு கருவிகள் வைக்கப் படும் அறை என்பது மிகவும் பாதுகாப்பானது என்றும் மின்சாரம் இருந்தால் மின் கசிவு ஏற் பட்டு தீவிபத்து ஏற்படும் என்பதால் மின்சார வயரோ, அல்லது இதர மின் சாதன கருவிகள் எதுவுமோ இல்லாத இடத்தில் கருவிகள் வைக்கப்படும்.
அப்படி இருக்கும் போது மின்னணு கருவி கள் உள்ள அறைக்குள் தீ விபத்து எப்படி ஏற்பட் டது என்பது மர்மமா கவே உள்ளது.
மேலும் உத்தரப் பிரதேசத்தில் தற்போது கடுங்குளிர் காலம் நிலவுகிறது-.
வடமாநிலங்களில் பல பகுதிகள் குளிரின் தாக்கத்தில் இருக்கும் போது மின்னணு கரு விகள் தீப்பிடித்துள் ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத் தின் பல்வேறு தொகுதிக ளின் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளுக்கு இந்த வாக்கு எண்ணிக் கையில் பதிவான வாக்கு கள் முக்கிய சான்றாக உள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு கருவிகள் தீயில் கருகியதில் ஏதா வது சதி இருக்க வாய்ப் புண்டு, சான்றுகளை அழிக்கும் வகையில் மின் னணு வாக்குப்பதிவு கருவிகளை வேண்டு மென்றே ஆளும் கட்சி தரப்பில் தீவைத்திருக்க வாய்ப்புள்ளது என்று இது தொடர்பாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment