இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 30, 2023

இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கரோனா

புதுடில்லி, டிச. 30- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (29.12.2023) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், கோவிட் தொற்று காரணமாக அய்ந்து பேர் இறந்திருப் பதாக செய்திகள் பதிவாகியிருக்கின்றன. கேரளாவில் இருவரும், மகாராட்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா ஒருவரும் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,351 ஆக உள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்…
காய்ச்சல், சளி உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கோவா, மகாராட்டிரம், கருநாடகம், தெலங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை ஒன்றிய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அவர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், “காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளி கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்ª காண்டவர்களுக்கு கரோனாபரி சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
தொற்றுஉறுதி செய்யப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்தவர்களுக் கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்குள்ளா னவர்கள், இன்ஃப்ளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment