76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

featured image

புதுடில்லி,டிச.14- கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ‘ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்’ மசோதா, நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, கடந்த ஜூலை 27 ஆம் தேதி மக்களவையில் நிறை வேறியது.
இந்நிலையில், நேற்று (13.12.2023) மாநிலங்களவை யிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறை வேற்றப்பட்டது. இதனால் 2 அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது.
விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், ”மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் 1,486 பழைய சட்டங்களை ரத்து செய்தது. தற்போது நீக்கப்படும் 76 பழைய சட்டங்களையும் சேர்த்து, மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன” என்று கூறினார்.

No comments:

Post a Comment