புதுச்சேரி, டிச.14 புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் மகளிருக்கு, 6 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் காவல் துறையின் ஒருபிரிவான ஊர்க்காவல் படை பிரிவில் பணியாற்றும் பெண்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்க நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி உள்துறை சார்பு செயலர் ஹிரண் வெளியிட்டுள்ள உத்தரவில்: துணை நிலை ஆளுநர் ஒப்புதலின் படி புதுச்சேரி ஊர்க்காவல் படையினர் சட்டம் 1965இன் கீழ் பிரிவு 12(1)(நீ) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் புதுச்சேரி காவல்துறையில் பணி புரியும் மகளிருக்கு இணையாக மகளிர் ஊர்க்காவல் படையினருக்கு (2 குழந்தைகளுக்கு மட்டும்) 6 மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஊர்க்காவல் படை பிரிவில் பணிபுரியும் இளம்பெண்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கிடைக்கும்.
No comments:
Post a Comment