சென்னை,டிச.10 – வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத் தீவு பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீன வர்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment