தருமபுரி, டிச. 14- மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதிஉதவி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசின் செயல்பட்டை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டிதலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கக் கோரி மற்றும் வாக்குச்சாவடி முக வர்கள் கூட்டம் தருமபுரி வன்னியர்குல மண்டபத்தில் நடைபெற் றது. இதில் அகில இந்திய காங் கிரஸ் ஓ.பி.சி. தலைவர் அஜய் சிங் யாதவ் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின் செய்தியா ளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்ததாவது:–
மோடி தலைமையிலான அரசு அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஜம்மு- – காஷ்மீர் மாநிலத் திற்கு விரைவில் மாநிலத் தகுதி ஒன்றிய அரசு வழங்க வேண்டும். வருகிற 2024-ஆம் ஆண்டு செப்டம் பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்த லில் நடத்தி முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பற்றி பேச அனுமதிக் கிறார்கள். ஆனால் அதானி பற்றி பேசினால் பதவி நீக்கம்வரை செல்கிறது. மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட மக்களவை உறுப்பி னரை பணம் பெற்றுக் கொண்டு அதானிகுறித்து பேசினார் என்ற பொய்யானகுற்றச் சாட்டை சொல்லி தகுதிநீக்கம் செய்வது கொடுமை யானது.
ராஜஸ்தான், மத்தியப் பிர தேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கருத வில்லை. இந்த தேர்தலில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.
பா.ஜனதாவைவிட அதிக வாக் குகளை பெற்று இருக்கிறோம். மக்கள் மனதில் ராகுல் காந்தி இருக்கிறார். காங்கிரஸ் இயக்கம் இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள் ளது.
சென்னையில் மேக வெடிப்பு ஏற்பட்டு 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்துள்ளது. இது இயற்கை பேரிடர். மழை பெய்த பின் தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்களுக்கு மனிதாபி மான அடிப்படையில் ரூ. 6000 நிதியுதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித் துள்ளார்.
இவ்வளவு விரைவாகமீட்பு நடவடிக்கை மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே விமர்சிக்கிறார்கள்.
காஷ்மீர் விஷயத்தில் நேரு தவறு செய்ததாக நாடாளுமன்றத் தில் அமித்ஷா பேசி இருப்பது தவறான செயல். இந்தியா- பாகிஸ் தான் பிரிவினையின்போது அங்கு வசித்த 99 சதவீத முஸ்லிம் மக்கள் மதத்தின் அடிப்படையில் பாகிஸ் தானுடன் சேரவில்லை நேரு கூறிய கருத்தை ஏற்று இந்தியாவுடன் இணைந்தனர். சாதி வாரி கணக் கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் மேனாள் எம்.பி.தீர்த்தராமன் மற்றும் காங் கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment