அகமதாபாத், டிச. 10- இந்தியாவில் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச் சாவடிகளையும் குறைக்க வேண் டும் என பொதுமக்கள் உள்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் குஜராத்தில் ஒன் றரை ஆண்டுகளாக போலியாக சுங்கச்சாவடி ஒன்று இயங்கி வந் துள்ள தகவல் வெளியாகி பா.ஜ.க. ஆட்சியின் நிர்வாக லட்சணம் அம்பலமாகியுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது. குஜராத் மாநிலம் பாமன்போர் – கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று தங்களுக்குச் சொந்தமான இடத்தில் சுங்கச்சாவடி அமைத்து உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை யில் பாதைகளை மாற்றி தாங்கள் அமைத்த சுங்கச்சாவடி வரை சாலை அமைத்துள்ளனர். மேலும் குறைந்த கட்டணத்தை வசூலித்து வந்துள்ளனர். இதனால் பலரும் இந்த சுங்கச்சாவடியைப் பயன் படுத்தி வந்துள்ளனர். இப்படி ஒரு சுங்கச்சாவடி செயல்படுவது குறித்து காவல்துறையினர் உள்பட எந்த அதிகாரிகளுக்கும் தெரிய வில்லை. இந்நிலையில்தான் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் திருப்பி மாற்றுப்பாதையில் விடப் படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து ஆய்வு செய்தபோதுதான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போலிச்சுங்கச் சாவடி மூலம் கட்டணம் வசூலிக் கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலியாக சுங்கச் சாவடி நடத்தி வந்த அமிர்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sunday, December 10, 2023
Home
இந்தியா
பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் லட்சணம் பாரீர் தனியாரின் போலி சுங்கச்சாவடி 5 பேர் மீது வழக்குப்பதிவு
பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் லட்சணம் பாரீர் தனியாரின் போலி சுங்கச்சாவடி 5 பேர் மீது வழக்குப்பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment