சென்னையில் கனமழையால் உருவான 57 ஆயிரம் டன் குப்பை அகற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

சென்னையில் கனமழையால் உருவான 57 ஆயிரம் டன் குப்பை அகற்றம்

சென்னை,டிச.14 – சென்னை மாநக ராட்சிப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ள பாதிப்பால் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவ ணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம், தேனாம்பேட்டை மண்டலம் 119-ஆவது வார்டு அலுவலகத்தில் நேற்று (13.12.2023) நடைபெற்றது. அந்த முகாமை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஆணையர் ராதா கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராயபுரம் மண்டலம்,50-ஆவது வார்டு, வெங்கடேசன் தெருவில் தீவிர தூய்மைப் பணியின் கீழ் மழைநீர் வடிந்தஇடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குப் பையை அகற்றுதல், பொது குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: வெள்ளப் பாதிப்பு முடிந்தபிறகு பொது சுகா தார நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 57 ஆயிரத்து 192 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. உட்புறச் சாலை களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி, அவற்றின் மீது நட வடிக்கைகள் தீவிரமாக மேற் கொள் ளப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment