தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 27, 2023

தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

featured image

எல்லோரும் கட்சி, கொள்கை என்று தேடுவார்கள் – அந்தக் கொள்கைகளை உருவாக்குவதற்காக நூலகங்களுக்குச் செல்வார்கள்; யார் யாரையோ பார்ப்பார்கள் – மற்ற அமைப்புகளைப் பார்ப்பார்கள் – எதைச் சொன்னால், மக்கள் ஈர்ப்பு இருக்கும் என்று நினைப்பார்கள்!
பெரியாருடைய கொள்கைகள் வித்தியாசமானவை; முற்றிலும் தனித்தன்மையானவை- ஒவ்வொன்றும், அவருடைய வாழ்க்கை அனுபவங்கள்!

சென்னை, டிச.27 எல்லோரும் கட்சி, கொள்கை என்று தேடுவார்கள். அந்தக் கொள்கைகளை உருவாக்குவதற் காக நூலகங்களுக்குச் செல்வார்கள்; யார் யாரையோ பார்ப்பார்கள்; மற்ற அமைப்புகளைப் பார்ப்பார்கள்; எதைச் சொன்னால், மக்கள் ஈர்ப்பு இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால், பெரியாருடைய கொள்கைகள் வித்தியாசமானவை; முற்றிலும் தனித்தன்மையானவை. எப்படி அவை தனித்தன்மையானவை என்று சொன் னால், அவர் புத்தகங்களைப் படித்து கொள்கைகளை உருவாக்கவில்லை; நூலகங்களுக்குச் சென்று கொள் கைகளைக் கொண்டு வரவில்லை. ஒவ்வொன்றும், அவ ருடைய வாழ்க்கை அனுபவங்கள். அதைப் பெரியார் அவர்கள் சொல்லும்பொழுது சொல்லுகிறார்கள். ‘‘என்னு டைய எண்ணம் சுதந்திர எண்ணம்; சுதந்திர அனுபவம்; சுதந்திர உணர்ச்சி பெற்றவன் நான்’’ என்றார். இதுதான் அந்தக் கொள்கைகளுக்கு அடிப்படை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளும் – தொடரும் அறைகூவல்களும்’’ – கருத்தரங்கம்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளான 24.12.2023 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன் றத்தில், ‘‘தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணி களும் – தொடரும் அறைகூவல்களும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

‘‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு” (தொகுதி-8) வெளியீடு
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 50 ஆம் ஆண்டு நினைவையொட்டி நடைபெறக்கூடிய நிகழ்வில், அவருடைய வாழ்க்கை வரலாறு 8 ஆவது தொகுதி வெளியீடு – தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால், அவர்களுடைய கொள்கை வெற்றிகளை – காலக்கணக்கீட்டைத் தாண்டி அவர்கள் அடைந்துவரும் வெற்றிகளையும், அதற்கடுத்து நாம் சந்திக்க இருக்கக் கூடிய சவால்களையும், சந்திப்பதற்கான ஏற்பாடுகளை, திட்டங்களையெல்லாம் நாம் அறிவிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நடைபெறக்கூடிய இந்தக் கருத்தரங்கக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்களே,
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மாநில பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மானமிகு இரா.தமிழ்ச்செல் வன் அவர்களே, இந்நிகழ்வில் நமக்கெல்லாம் சிறந்த கொள்கை விருந்து அளிக்கக் கூடிய வகையில், உரை யாற்றியுள்ள நம்முடைய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வர லாற்று நூலை வெளியிட்டு உரையாற்றிய நம்முடைய அருமைச் சகோதரர் மாண்புமிகு மானமிகு
எம்.எம்.அப்துல்லா அவர்களே,
நூலின் முதல் படியைப் பெற்றுக்கொண்டு அற்புத மான ஓர் உரையை ஆற்றிய சுயமரியாதை வீரர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் அருமைச் சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய தே.செ.கோபால் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
தெலங்கானாவிலிருந்து வந்திருக்கக் கூடிய நாத்திக அமைப்பைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கழகத் தோழர் களே, பெரியோர்களே, செயல்வீரர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே அற்புதமான கருத்துகளை கழகத் துணைத் தலைவர் தொடங்கி, தொடக்கவுரை, வரவேற்புரை யாற்றிய அனைவரும் சொல்லியிருக்கிறார்கள்.

உணர்ச்சிப்பூர்வமான ஒரு நிகழ்ச்சி இது
உணர்ச்சிப்பூர்வமான ஒரு நிகழ்ச்சி இது – என்னைப் பொறுத்தவரையில். ஏனென்றால், 50 ஆண்டுகளுக்கு முன்னால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்தில், அன்னை மணியம்மையார் அவர் களுடைய உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது அதற்கு முன்பே – அய்யா அவர்கள், அன்னையார் அவர்களை அதிகமாக சுற்றுப்பயணத்திற்குக்கூட அழைக்கமாட் டார்கள்.
அய்யா அவர்கள் கடைசியாக தியாகராயர் நகரில் உரையாற்றியபொழுது, வழக்கமாக அய்யாவுடன் வரக்கூடிய அன்னை மணியம்மையார் அவர்களை, அய்யா வற்புறுத்தி, ‘‘வரவேண்டாம் அம்மா, மருத்துவர் களைப் பார்த்துவிட்டு, நான் திரும்பி வந்துவிடுவேன்; மூன்று நாள்கள்தானே, மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று சொல்லிவிட்டு திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தார்.
‘‘முன்னால் நான் போகப் போகிறேனா, நீ போகிறாயா? என்று தெரியாது; இருக்கின்ற நாள்களை நாம் பயன்படுத்துவோம்” என்று உருக்கமாகச் சொல்வார் அய்யா.

ஆரியத்திற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது; அய்யாவோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தார்கள்!
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் மறைந்தார் என்று சொல்லுகின்ற நேரத்தில், இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, பல பேருக்கு, குறிப்பாக ஆரியத்திற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அய்யாவோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தார்கள்.
முடிந்துவிடுவதற்கு, இது என்ன ராஜ கோபாலாச்சாரியார் தொடங்கிய இயக்கமா?
இன்றைக்கு சுதந்திரா கட்சி எங்கேயாவது இருக் கிறதா? அதைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இளைய தலைமுறையினருக்கு அப்படி ஒரு கட்சி இருந்தது என்றே தெரியாது.
சுதந்திரம் என்பதே கேள்விக்குறி என்று வரும் பொழுது, சுதந்திரா கட்சி என்பது நினைவிற்குரியதாகக் கூட இல்லை.
ஆனாலும், அவர் இல்லாத குறையை, அந்த இனம் தீர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த இனம், அந்தக் கொள்கையை ஒவ்வொருவரும் நடமாடும் இயந்திரமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், அமைப்பு ரீதியாக.
தந்தை பெரியார் மறைவுற்ற ஒரு நிலையில், மிகப்பெரிய இழப்பு நமக்கு. அன்னை மணியம்மையார் அவர்கள் சந்தித்த சோதனைகள் பலப்பல – அந்த அய்ந்தாண்டு காலத்தில்.

அய்யாவின் வாழ்க்கையை
மூன்று அய்ம்பது ஆண்டுகாலமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்!
மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், அய்யா அவர்களுடைய வாழ்க்கையை மூன்று அய்ம்பது ஆண்டுகாலமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
முதல் 50 ஆண்டுகாலம் ஈரோட்டை மய்யப்படுத் தியது. அய்யா அவர்கள் சொல்வார், ‘‘என்னுடைய நண்பர்கள் எல்லாம் 45 வயதிற்குமேல் வாழவில்லை. நான் 47 ஆண்டுகளைத் தாண்டிவிட்டேன். ஆகவே, நான் இனிமேல் என்னுடைய வாழ்வை பொது வாழ்க்கைக்கே செலவழிக்கவேண்டும்” என்றார்.
வாணிபப் பெரியாராக இருந்தவர், வாலிபப் பெரி யாராக இருந்தவர். பெரியார் என்பது பின்னாளில்தான். அதற்கு முன்பு இராமசாமியாக இருந்தவர்.

சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என்று
அவர் நினைத்தார்!
அவர் ஈரோடு நகரத்தில் மிக முக்கியமானவராக ஆகியவுடன், அடுத்தடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் வளர்ந்தவுடன், அவருடைய பொதுவாழ்க்கை என்பது உள்ளாட்சித் துறையிலிருந்து, நகர சபைத் தலை வரிலிருந்து தொடங்கியது.
ஆனால், அதைத்தாண்டி, சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என்று அவர் நினைத்தார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டிய காரணத்தினால், சுருக்கமாக இரண்டு வரிகளில் சொல்லுகிறேன்.

பெரியாருடைய கொள்கைகள் வித்தியாசமானவை; முற்றிலும் தனித்தன்மையானவை!
எல்லோரும் கட்சி, கொள்கை என்று தேடு வார்கள். அந்தக் கொள்கைகளை உருவாக்குவ தற்காக நூலகங்களுக்குச் செல்வார்கள்; யார் யாரையோ பார்ப்பார்கள்; மற்ற அமைப்புகளைப் பார்ப்பார்கள்; எதைச் சொன்னால், மக்கள் ஈர்ப்பு இருக்கும் என்று நினைப்பார்கள்.
ஆனால், பெரியாருடைய கொள்கைகள் வித்தி யாசமானவை; முற்றிலும் தனித்தன்மையானவை.
எப்படி அவை தனித்தன்மையானவை என்று சொன் னால், அவர் புத்தகங்களைப் படித்து கொள்கைகளை உருவாக்கவில்லை; நூலகங்களுக்குச் சென்று கொள்கை களைக் கொண்டு வரவில்லை.
ஒவ்வொன்றும், அவருடைய வாழ்க்கை அனு பவங்கள். அதைப் பெரியார் அவர்கள் சொல்லும்பொழுது சொல்லுகிறார்கள்.
‘‘என்னுடைய எண்ணம் சுதந்திர எண்ணம்; சுதந்திர அனுபவம்; சுதந்திர உணர்ச்சி பெற்றவன் நான்” என்றார். இதுதான் அந்தக் கொள்கைகளுக்கு அடிப்படை.
அதன் காரணமாகத்தான், சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது, ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் பொழுது, ‘‘தண்ணீர் மூக்கு வழியாக வழிகிறது, தூக்கிக் குடி, கவ்விக் குடிக்காதே, தீட்டாகிவிடும்” என்று சொன்னார்கள்.
இது ஏன்? என்று கேட்கிறபொழுது, ஜாதி என்று அவருக்குப் பதில் கிடைக்கிறது.
எனவே, ஜாதி ஒழிப்பு என்ற கொள்கை அவருக்கு எப்பொழுது ஊறிற்று என்று சொன்னால், தாய்ப்பால் தாண்டிய கட்டத்திலேயே ஊறியது.

சமூகத்தில் என்ன நடக்கிறது
என்று பார்த்துதான்!
எந்த இடத்திற்கும்போய் அவர் பார்த்து, படித்து, ஆராய்ச்சி செய்து வரவில்லை. சமூகத்தில் என்ன நடக் கிறது என்று பார்த்துதான் அதனைத் தெரிந்துகொள்கிறார்.
பெண் குழந்தைக்குத் திருமணம் செய்துவிட்டு, அந்தக் குழந்தையை இளம்விதவையாக ஆக்கி, ‘‘மாமா, என்னுடைய வாழ்க்கையை இப்படி ஆக்கிவிட்டார்களே” என்று அந்தக் பெண் குழந்தை கதறிய நேரத்தில், 120 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு அது.
‘‘நான் அந்தப் பெண் குழந்தையைத் தூக்கி விடும் பொழுதே, அந்தப் பெண்ணுக்குப் புது வாழ்வை அமைத்துக் கொடுக்க நினைத்தேன்” என்று சொன் னார்கள்.
பெண்கள் ஏன் இப்படி கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்று சிந்தித்தார்கள்.
இப்படி ஒவ்வொரு நிகழ்வுகள்.

அன்றைய ஒன்றிய அமைச்சரின் வியப்பு!
‘‘நீங்கள் எப்படி பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்தீர்கள்?” என்று டாக்டர் சந்திரசேகர், மிகப்பெரிய பொருளாதார நிபுணர், ஒன்றிய இணை அமைச்சராக இருந்தவர், இந்திரா காந்தி அம்மையாரின் அமைச் சரவையில். எனக்குப் பேராசிரியர் பல்கலைக் கழகத்தில். அய்யா அவர்களிடம் இப்படிக் கேட்டபோது, அதற்கு அவர் பதில் இவ்வாறு கூறினார்.
‘‘சதா, குடித்துவிட்டு, அடித்துக்கொண்டே இருந்தான். ‘‘இந்தப் பிள்ளைகளால்தான் நான் வாழவேண்டி இருக்கிறது என்று அந்த அம்மையார் வந்து அழுவார்.”
‘‘நான் கண்டிப்பேன்; ஒவ்வொரு நாளும் பஞ்சாயத்து செய்வேன். அதனால்தான் அந்த எண்ணம் வந்தது” என்றார்.
‘‘மனிதாபிமானம் – அந்தப் பெண்ணுக்கு ஏன் சுதந்திரம் இல்லை. அந்தப் பெண்ணுக்கு வேலை வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், கருத்தடை செய்யக் கூடிய கர்ப்ப ஆட்சி இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் நினைத்தேன். அந்தக் கொள்கை வந்தது – நினைத்ததை நான் வேகமாக எடுத்துச் சொன்னேன்” என்றார்.

ஜாதி ஒழிப்பையே
கொள்கையாகக் கொண்டார் – மூடநம்பிக்கை ஒழிப்பையே அதற்கு ஆதாரமாகக் கொண்டார்!
இப்படி அவருடைய ஒவ்வொரு கொள்கை களையும் நீங்கள் எடுத்துப் பார்த்தால், அவை அவருடைய அனுபவங்கள்தான். அந்த அனு பவங்களே கொள்கைகளாக வந்த காரணத்தி னால்தான், மானிடம் – மனிதம் என்பது மறுமலர்ச்சி அடைய அவர்கள் ஜாதி ஒழிப்பையே கொள்கை யாகக் கொண்டார். மூடநம்பிக்கை ஒழிப்பையே அதற்கு ஆதாரமாகக் கொண்டார். எதையும் தன்னுடைய வாழ்க்கையிலிருந்தே அதனை அமைத்துக் கொண்டார்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், முதல் 50 ஆண்டு காலத்திலே உள்ளூரில் இருந்து இயக்கத்தை நடத்தி வந்தார்.
அதற்கு அடுத்த நிலையில், இப்பொழுது இந்தியா முழுவதும் அந்தக் குரல் கேட்கக்கூடிய அளவிற்கு வந்துவிட்டது.

பல பேருக்கு பெரியார் என்றால்,
இன்னமும் அச்சுறுத்தல்தானே!
பெரியார் மறைந்தவுடன் எதிரிகள் மகிழ்ச்சியடைந் தார்கள் என்று இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்கள். ஆனால், பல பேருக்கு இன்னமும் அச்சுறுத்தல்தானே!

நாடாளுமன்றத்தில் அருமைச் சகோதரர் அப்துல்லாவின் குரல்!
அதற்கு அடையாளம்தான், என் அருகில் இருக்கும் நம்முடைய அருமைச் சகோதரர் அப்துல்லாவின் குரல்.
இதில் என்ன கொடுமை என்று சொன்னால், மாநிலங் களவையிலிருந்து அவரை இடைநீக்கம் செய்திருப்பது – இதுவரை அதுபற்றிய முழுவிவரம் வெளிவரவில்லை. இந்தத் தொடர் வரையில்தான் என்று நாங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம்.
பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்வதற்கு, பேரவைத் தலைவருக்கு உரிமை உண்டு. அது சட்ட விதிகளில் இருக்கிறது. ஆனால், இவரைப் பொறுத்தவரையில், இந்தத் தொடருக்கு மட்டுமல்ல; அடுத்ததாக கூடவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்திலும் அப்துல்லா அவர்கள் வரக்கூடாது என்று சொன்னால், இதைவிட ஒரு கொடுமையான ஒரு எதேச்சதிகாரம் வேறு என்ன இருக்க முடியும்?
அப்படி அவர் என்ன செய்தார்? தேசியக் குற்றம் செய்தாரா? தேச விரோதமாக நடந்துகொண்டாரா?
நாடாளுமன்றத்திற்கு என்ன பெயர் என்று சொன்னால், நான் அரசியல் மாணவன் – பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவன். அந்த வகையில் சொல்லுகிறேன்,‘‘It is a Elders House” – ‘‘Young People” அங்கே போயிருக்கிறார்கள்.
நாங்கள் அனுப்புகின்ற அத்துணை இளைஞர்களும் கூட, ‘எல்டர்’களான அளவிற்கு முதிர்ச்சி உள்ளவர்கள்.
அப்துல்லா அவர்கள், காஷ்மீர் பிரச்சினைப்பற்றி உரையாற்றும்பொழுது, பெரியாருடைய மேற்கோளை எடுத்துக்காட்டுகிறார். அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்கள்.

நாடாளுமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம்; அந்த உரிமை உறுப்பினர்களுக்கு இருக்கிறது!
எந்தக் கருத்தையும் சொல்லக்கூடாது என்று சொல்லக்கூடாது. கருத்துரிமைக்கு எந்த அளவிற்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிமை வைத்திருக்கிறார்கள் என்றால் நண்பர்களே, நாடாளுமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம்; அந்த உரிமை உறுப் பினர்களுக்கு இருக்கிறது. அதே கருத்தை வெளியில் வந்து பேசினால், நாடாளுமன்றத்திற்கு வெளியேயோ, பொதுக்கூட்டங்களிலோ பேசினால், சட்டப்படி அவர்கள்மீது கிரிமினல் வழக்குத் தொடரவேண்டிய செய்தியாக அது இருந்தலும், அதே கருத்தை நாடாளு மன்றத்தில் பேசினால், அவர்மீது இப்படி கருத்தைப் பேசினார் என்று கிரிமினல் வழக்குப் போட முடியாது. அதற்குப் பெயர் ‘‘லீகல் இம்மியூனிட்டி” என்று பெயர்.
(தொடரும்)

No comments:

Post a Comment