தூத்துக்குடி, திருநெல்வேலியில் இரண்டு நாட்களில் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது முழுவீச்சில் தொடரும் 'பெரியார் தொண்டறம்' பணிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

தூத்துக்குடி, திருநெல்வேலியில் இரண்டு நாட்களில் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது முழுவீச்சில் தொடரும் 'பெரியார் தொண்டறம்' பணிகள்....

featured image

தூத்துக்குடி, டிச.21 யாரும் எதிர்பாராத அளவில் பெய்த அதி தீவிர கன மழையால் தூத்துக்குடியில் பல இடங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க பெரியார் தொண்டறம் தோழர்கள் தூத்துக்குடி காப்பாளர் காசி அவர்களின் தலைமையில் பட்டினி கிடக்கும் மக்களின் பசி தீர்க்க விரைந்தனர்.
காலநிலை மாற்றத்தால் மிகக் குறுகிய இடைவெளியில் தமிழ்நாட்டின் இரட்டைப் பேரிடராக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் பொழிந்த அதி தீவிர கனமழையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அரசு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், மக்கள் நிலையை அவர்கள் இருக்கும் இடம் சென்று தான் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அந்த இக்கட்டான சூழலில் 19.12.2023 அன்று தூத்துக்குடியில் இருக்கும் பெரியார் தொண்டறம் தோழர்கள் தூத்துக்குடி காப்பாளர் காசி அவர்களின் முன்னெடுப்பில், தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பு மற்றும் வே.ஜெயபாலன் ஆகியோர் உணவுக்கான பொருட்களையும், குடிநீர் குப்பிகளையும் வழங்க, வழக்குரைஞர் த.வீரன் உள்ளிட்ட தோழர்கள் பலருடன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக முகாம், சிறீவைகுண்டத்தில் 500, இந்து மேல்நிலைப்பள்ளி முகாம், ஆழ்வார்திருநகரியில் 500, பெரியநம்பி திருமண மண்டபம், ஆழ்வார் திருநகரியில் 300, ஆழ்வார் தோப்பு கிராமத்தில் பாலத்திற்கு மேல் சென்ற தண்ணீரைக் கடந்து சென்று 1500, சமுதாய நலக்கூடம் முகாம், சிறீவைகுண்டத்தில் 700, நகர் சப் ஜெயில், குரும்பூர், ஏரல், செய்துங்க நல்லூர், என மொத்தம் 3500 பேருக்கு உணவு தயாரித்து, சூடான உணவை சுமந்தபடி தண்ணீரில் நடந்து சென்று கொடுத்தனர்.

இப்பணிகள் இரவு 9 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2 மணி தாண்டியும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளில் தி.மு.க. தென்காசி மாவட்ட பொருளாளர் ஜெயபாலன், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், தென்காசி மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், தென்காசி ஒன்றிய துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டி ஆகியோர் பங்கேற்று தொண் டாற்றினர். இதற்கான சமையல் கீழச்சுரண்டை யில் தயாரானது. திருச்செந்தூர் சாலை முற்றி லுமாக மூழ்கியதால், அதற்கருகில் உள்ள இடங் களுக்கு இரண்டு டாடா ஏசி வண்டிகள் மூலம் உணவு கொண்டு போய் சேர்க்கப்பட்டது.

அதேபோல் திருநெல்வேலியைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளரான ஆலடி எழில்வாணன் முன்னெடுப்பில், “Einstein Support Team என்ற WhatsApp குழு மூலம் ஆசிரியர்கள், மேனாள் – இன்னாள் மாணவர்கள் என 260 நபர்கள் குழுவில் இணைந்தனர். தேவைக்கேற்ப இரண்டு கார், வேன் என உணவைத் தயாரித்து எடுத்துச் சென்று உரியவர்களுக்கு நேரடியாகக் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இதில் பலருக்கும் தாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம் என்றெல்லாம் தெரி யாது, ஆலடி எழில்வாணனும் சொல்லவில்லை. அனைவரும் பெரியார் தொண்டறம் எனும் ஒற்றைக் குடையின் கீழ் மக்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்வதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.

இப்பணிகளில் தோழர்கள் சேசு ராஜன், கடையம் ஜெயக்குமார், ராஜேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் PS அண்ணாமலை, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் JK ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வளன் அரசு, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஜேம்ஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சுப்பையா பாண்டியன், ராமராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் ராமராஜ், முத்து சுப்பிர மணியன், சுந்தரபாண்டியபுரம் மாரியப்பன், சாம்பவர்வடகரை மாறன், சுரண்டை நகர துணைச் செயலாளர்கள் பூல்பாண்டியன், சசிகுமார், சுரண்டை நகர நிர்வாகிகள் AG  கணேசன், IMK முத்துக்குமார், சுதன் ராஜா, கோமதிநாயகம், ISM மாரியப்பன், பவுல்ராஜ், கிரி ராஜன், பேச்சாளர் வெல்டிங் மாரியப்பன், வடகரை சபிக், தென்காசி திருநாவுக்கரசு, தங்கப்பாண்டியன், சதீஷ், மது, கடையம் சசிகுமார், சுரேஷ், மோகன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
அய்ன்ஸ்டீன் கல்லூரி மேனாள் – இன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். மேலும், கல்லூரி மாணவர்கள் உதவியுடன் உணவு விடுதி சமையலர்கள் துரிதமாகவும், சுவையாகவும் சாம்பார் சோறு, புளியோதரை மற்றும் கிச்சடி செய்து கொடுத்து நெருக்கடி நிலையை சமாளிக்க உறுதுணையாக இருந்தனர். 19-12-2023, ஆலடி எழில்வாணன் அய்ன்ஸ்டீன் கல்லூரியின் மேனாள் மாணவர் சதீஷ் கோயில்பட்டியிலிருந்து 600 சாப்பாடு, 1000 தண்ணீர் குப்பிகள், 1000 Biscuit pockets, 300 sanitary napkins மேலும் சில தின்பண்டங்கள் வழங்கியதைப் பல இடங்களில் வழங்கினர்.

இதே மாணவர் 2017 நவம்பர் ஒக்கி புயலின்போது இதைவிடப் பல மடங்கு உதவினார். அப்போது கடலூருக்கு இரண்டு பேருந்துகளில் சென்று உதவினோம். ஒவ்வொரு பகுதிக்கும் அதன் தேவைக்கேற்ப 25- 50 – 100 – 200 நபர்களுக்கு என்று உணவு வழங்கப்பட்டது. உணவு வழங்கிய முக்கிய இடங்கள் பாப்பாக்குடி ஒன்றியம்: கருவனூர், மானூர் ஒன்றியம்: பாலாமடை, மானூர், பிராஞ்சேரி, மாவடி திருநெல்வேலி மாநகரில் பாலபாக்ய நகர், சிந்துப்பூந்துறை, CN கிராமம், நெல்லை சந்திப்பு (Junction), பாளை பேருந்து நிலையம், கோடீஸ்வரன் நகர் மற்றும் ராஜகோபாலபுரம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று உணவு வழங்கியது மன நிறைவாக இருந்தது.
இப்பணிகளை சென்னையிலிருந்து பெரியார் தொண்டறம் ஒருங்கிணைப்பாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment