மழை வெள்ள நிவாரணப் பணிக்காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 5, 2023

மழை வெள்ள நிவாரணப் பணிக்காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, டிச.5 மழை வெள்ள நிவாரணப் பணிக் காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள் ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, சுற்றுப் புற மாவட்டங்களில் கன மழை கொட்டி யது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீசியது. கனமழையால் சென்னை மாநகரம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது. பெரும் பாலான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக் குவரத்து துண்டிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் சென் னையில் வெள்ள சீரமைப்பு பணிகள் குறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப் போது; சென்னையில் மழை பாதிப்பின் தாக்கம் கடந்த காலங்களை விட குறைவாக உள்ளது. மிகப்பெரிய வெள் ளம் ஏற்பட் டாலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை களால் பாதிப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் மீனம் பாக்கத்தில் 43 செ.மீ. மழை பெய்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2015இல் வெள்ளத்தில் 199 பேர் இறந் தார்கள்; அதை விட அதிக மழை பெய்தா லும் 7 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த உயிரிழப் புகளும் ஏற்பட் டிருக்கக் கூடாது.

இதற்காக மிகவும் வருந் துகிறேன். 2015-இல் ஏற்பட் டது செயற்கையான வெள் ளம், தற்போது ஏற்பட்டது இயற்கையாக பெருக்கெ டுத்த வெள்ளம். 9 மாவட் டங்களில் 61,666 நிவாரண முகாம்களில் 11 லட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட் டுள்ளன. 1 லட்சம்  பால் பாக்கெட்டுகள், தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட் டுள்ளன. அடையாறு, கூவம் முகத்துவாரங்களில் புயல் காரணமாக தண்ணீர் கடலில் கலப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இன்னல்களில் இருந்து பொது மக்கள் வெளிவர தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் அரசு எடுத்து வருகிறது.

மிககனமழை பெய்த போதிலும் உடனுக்குடன் மீட்பு பணிகள் நடைபெற் றது. மழையை பொருட்படுத்தாமல் நேற்றே (4.12.2023) மீட்பு, நிவாரணப் பணிகள் தொடங்கப்பட் டன. 47 ஆண்டுகள் காணாத  பெருவெள்ளத்தில் இருந்து சென்னை தப்பிய தற்கு ரூ.4000 கோடியில் வடிகால் அமைக்கப்பட் டதே காரணம். ரூ.4,000 கோடியில் வடிகால் பணிகள் மேற்கொள்ள ப்பட்டதால் தான்  சேதம் குறைந்தது. மழை நீர் வடிகால் பணி களால்தான் வரலாறு காணாத மழை வெள்ளத்தை நம்மால் சமாளிக்க முடிந் தது. இவ்வளவு பெருமழையின்போதும் வினாடிக்கு 8,000 கனஅடி மட்டுமே செம் பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப் பட்டது.

வெளிமாவட்டங்களில் இருந்து 5,000 ஊழியர்கள் மீட்பு, நிவாரண பணிகளுக் காக வரவழைக்கப்பட்டுள்ளனர். வெள் ளம் சூழ்ந்துள் ளதால் சில இடங்களில் மின்விநியோகம் வழங்கப் படவில்லை. 

75 சதவீத இடங்களில் மின்விநியோ கம் சீரானது. மழை வெள்ள நிவாரணப் பணிக்காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளு மன்றத்தில் இது தொடர்பாக திமுக மக்க ளவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள். அரசின் நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment