ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்"

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதப்பதிவு

சென்னை,டிச.2-- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழன் _ திராவிடன் ஆகிய இரண்டையும் அரசியல்களத்தில் அடையாளச் சொற்களாக மாற் றிய 'திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதர் அவர் களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்ட பத்தை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.

அயோத்திதாசரின் நூல்கள் நாட்டுடைமை, ரூ.10 லட்சம் பரிவுத்தொகை வழங்கல்,  அயோத்தி தாசர் அஞ்சல் தலை வெளியீடு, அவர் நடத்திய தமிழன் இத ழுக்கு நூற்றாண்டு விழா  மற்றும் அவர் பெயரிலான சித்த மருத் துவ ஆராய்ச்சி மய்யத்துக்கு நிலம் ஆகியவற்றை நிறைவேற்றியது தி.மு.க ஆட்சியே!

ஆதி திராவிடர் குடியிருப்பு களை மேம்படுத்த "அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம் பாட்டுத் திட்டம்" வரும் அய்ந் தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் நமது திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட உள் ளது. புத்தரை 'இரவு பகலற்ற ஒளி' எனப் போற்றிய பண்டிதரின் சிந்த னைகளும் அத்தகைய ஒளியாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன் படட்டும்!

-இவ்வாறு அப்பதிவில் முதல மைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment