சென்னை, டிச. 21- டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் அடுத்த ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆண்டு திட்ட அட்டவணை ஒவ் வொரு ஆண்டும் டிஎன் பிஎஸ்சியால் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேர் வுகள் நடத்தப்படும், எவ் வளவு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என் பதற்கான ஒரு தோராய மான பட்டியலை ஆண்டு திட்ட அட்டவணையாக வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்விற்கு 2024ஆ-ம் ஆண்டு ஜன வரி மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் என் றும், ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதற்கான பணியிடங் களை பின்னர் அறிவிக்கப் படும் என்றும் தேர்வா ணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சமூக சேவை துறை யில் 2 பணியிடங்களுக்கும் பிப்ரவரி மாதம் அறி விக்கை வெளியிடப்படும் என்றும், மே மாதம் தேர் வுகள் நடைபெறும் என் றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டத் துறையில் ஆங்கில எழுத் தாளர் பதவிக்கு 6 பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும், மே மாதம் தேர்வு நடை பெறும்.
வனத்துறையில் 1264 பணியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் -_ ஜூன் மாதம் தேர்வு நடைபெறும்.
குரூப் 1 தேர்விற்கு 65 பணியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்_ ஜூலை மாதம் தேர்வு நடைபெறும். ஆங் கில துணை சேவை துறை யில் 467 பணியிடங்க ளுக்கு ஏப்ரல் மாதம் அறி விக்கை வெளியிடப்படும் _ ஜூலை மாதம் தேர்வு நடைபெறும்.
சட்டத்துறையில் 25 பணியிடங்களுக்கு ஏப் ரல் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்.
வனத்துறையில் வன அதிகாரி 118 பணியிடங் களுக்கு மே மாதம் அறி விக்கை வெளியிடப்படும் _ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த புவியியல் துறையில் 5 பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் _ ஆகஸ்ட் மாதம் தேர்வு நடை பெறும். குரூப் 2 தேர்விற்கு 1294 பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் _ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும். அறிவியல் துறையில் 96 பணியிடங் களுக்கு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப் படும்_செப் டம்பர் மாதம் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த புள் ளியியல் துறையில் 23 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும், செப்டம்பர் மாதம் தேர்வு நடை பெறும்.
No comments:
Post a Comment