குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு 3 மசோதாக்களை அனுப்பிய பஞ்சாப் ஆளுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு 3 மசோதாக்களை அனுப்பிய பஞ்சாப் ஆளுநர்

சண்டிகர்,டிச.8- பஞ்சாப் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது.
இந்நிலையில், பஞ்சாப் காவல் துறை சட்டத்திருத்த மசோதா, பஞ்சாப் பல்கலைக் கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, சீக்கிய குருத்வாராக்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுப்பியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரையாண்டு தேர்வுகள் தேதியில் மாற்றமில்லை
சென்னை,டிச.8- அனைத்து மாவட் டங்களிலும் ஏற்ஸ்கனவே அறிவித்தபடி, வரும் 11ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்பு காரணமாக, பள்ளி களில் அரையாண்டு தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்குமா என்ற, கேள்வி எழுந்தது.
குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு களுக்கு, நேற்று (7.12.2023) தேர்வுகள் துவங் குவதாக இருந்தது. அந்த தேதியில், சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவொளி, வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏற்கெனவே அறிவித்த கால அட்டவணைப்படி, வரும் 11ஆம் தேதி முதல் 22 வரை, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும்.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடக்க விருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, முறையே டிச., 14 மற்றும் 20ஆம் தேதிகளில் நடத்தப்படும்; வேறு மாற்றங்கள் ஏதுமில்லை.
அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான வினாத்தாள் முறை பின்பற்றப் படும். இதனால், தனித்தனியாக வினாத்தாள் தயாரிக்க வேண்டிய சிரமம் தவிர்க்கப்படும்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment