அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாட்கள் காவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாட்கள் காவல்

திண்டுக்கல்,டிச.14-அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்று கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, மூன்று நாட்கள் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி யளித்தது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண் காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு மீது, சொத்துக் குவிப்பு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, பிணை கோரி டிச., 5இல் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை நடுவர் மோகனா தள்ளுபடி செய்தார். டாக்டர் சுரேஷ் பாபுவிடம் 4 மணி நேரம் ரகசிய விசாரணை நடந்தது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அங்கித் திவாரியை மூன்று நாட்கள் தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, இதே நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மதுரை சிறையில் இருந்த அங்கித் திவாரி, நேற்று மதியம், 12:15 மணிக்கு திண்டுக்கல் அழைத்து வரப்பட்டு, நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நடுவர் மோகனா, அங்கித் திவாரியிடம் 45 நிமிடம் விசாரித்தார். இரு தரப்பு வழக்குரைஞர்கள் வாதத்திற்கு பின், நேற்று முதல் நாளை மாலை, 5:00 மணி வரை மூன்று நாட்கள் காவல்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி யளித்தார். காவல்துறையினர் அங்கித் திவாரியை விசாரிக்க அழைத்துச் சென்றனர்

No comments:

Post a Comment