காஷ்மீர் தொடர்பான 2 சட்ட முன்வடிவுகள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

காஷ்மீர் தொடர்பான 2 சட்ட முன்வடிவுகள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடில்லி,டிச.13- நாடா ளுமன்ற மாநிலங்கள வையில் காஷ்மீர் தொடர்பாக 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் (11.12.2023) நிறைவேற்றப்பட்டன.
காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து 2 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர் களில் ஒருவர் என 3பேரை காஷ்மீர் சட்டசபைக்கு நிய மன உறுப்பினர்களாக நிய மிக்க வகைசெய்யும் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைப்போல காஷ்மீரில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யவும் மசோதா கொண்டு வரப்பட்டது. காஷ்மீர் மறு சீரமைப்பு (திருத்தம்) மசோதா மற்றும் காஷ்மீர்

இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா எனப்படும். இந்த 2 மசோதாக்கள் மீதும் விவாதம் நடந்தது.
இதைத்தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித்ஷா விவாதங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர், புதிய மற்றும் வளர்ந்த காஷ்மீருக்கான தொடக்கம் இது என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் காஷ்மீர் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் என் றும் நம்பிக்கை தெரிவித்தார்.
காஷ்மீர் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த 2 மசோதாக்களும், அங்கே கடந்த 75 ஆண்டு களாக உரிமைகள் பறிக்கப்பட் டவர்களுக்கு நீதி வழங்கும் என தெரிவித்த அவர், மேலும் இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்த இடஒதுக்கீடு சட்ட சபையில் குரல் கொடுக்க உதவும் என்றும் கூறினார்.

அதேநேரம் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் இரண்டு பிழைகளான, காஷ் மீரில் தவறான நேரத்தில் மேற்கொண்ட போர் நிறுத் தம் மற்றும் காஷ்மீர் பிரச் சினையை அய்.நா.வில் எடுத் துச்சென்றது ஆகியவற்றால் அந்த பிராந்தியம் பெரும் பாதிப்பை சந்தித்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அவரது பதிலுரையை தொடர்ந்து குரல் வாக்கெ டுப்பு மூலம் இந்த மசோ தாக்கள் நிறைவேறின.
முன்னதாக இந்த மசோதாக்களுக்கு உள்துறை அமைச்சரின் பதிலில் திருப்தி அளிக்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய் தனர். இந்த மசோதாக்கள் ஏற்கெனவே மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment