பதிலடிப் பக்கம் : கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் - உஷார்! உஷார்!! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

பதிலடிப் பக்கம் : கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் - உஷார்! உஷார்!! (2)

featured image

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

8.12.2023 அன்றைய தொடர்ச்சி…
இன்னொரு முக்கிய கோயில் அதுதான் சிதம்பரம் நடராஜன் கோயில் – பொன்னம்பலத்தான் விவகாரம்:
இந்தக் கோயிலின் சுரண்டல் மகாபுராணம் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இந்தக் கோயிலில் நடக்கும் ஊழல்களையும், பித்தலாட்டங்களையும் பிழையின்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவரும், புவனகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந் தவருமான வி.வி. சாமிநாதன் அவர்கள், (எப்பொழு தும் நெற்றியில் மதக்குறியோடுதான் இருப்பார்) (அ.இ. அ.தி.மு.க.) சட்டப்பேரவையில் ஆற்றிய உரையே போதுமான தாகும் (25.3.1982).என்னென்ன நகைகள் கொள்ளை போயின? அம்மன் தாலி மறைந்த மர்மம், தங்க நகைகளை உருக்கியதில் 16 பவுன் திருட்டு, நடராசருடைய குஞ்சிதபாதம் என்று சொல்கிறார்களே, அதிலிருந்து வைரக்கற்கள் நான்கும் மாயம்! உண்டிய லில் போட வேண்டிய சிறு சிறு நகைகளை உண்டியலில் போடக் கூடாது; படிக்கட்டிலே வையுங்கள் என்று சொல்லி சுருட்டிய சூழ்ச்சிகள், நடராசருக்கு இடதுபுறம் உள்ள “ஹஸ்த ராஜா” இடுப்பிலே இருந்த ஒன்றரை பவுன் கிண்கிணி – தங்க அரைஞாணும் காணவில்லை.அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, இரண்டு கட்டி மூசைத் தங்கமும், 26 தங்க நாணயங் களும் வைத்திருந்தது, இந்து அற நிலையத் துறை ஆணைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
கோயிலுக்குள் பரமானந்த கூபம் என்ற ஒரு கிணறு இருக்கிறது. உண்டியலில் பணம் போட விரும்பும் பக்தர்களை அந்தக் கிணற்றில் போடுமாறு இந்தப் பார்ப்பனர்கள் கூறுவார்கள். அவ்வாறு போடும் பழக்கம் உண்டு. 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏலம் விடுவார்களாம். பொது ஏலத்திற்கு விடாமல் சில நேரங்களில் இந்தத் தீட்சதப் பார்ப்பனர்களே ஆளை அமர்த்தி, கிணற்றில் மூழ்கச் செய்து பணத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு சென்று விடுவார்கள். இந்தத் திருட்டை வெளியிலே சொன்ன கிருஷ்ணசாமி தீட்சதரைத் தாக்கியிருக்கின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த செயலாளர்கள் இருவர், நாக வெங்கடேச தீட்சதர், நடராஜ தீட்சதர், சங்கச பேத தீட்சதர் ஆகிய தீட்சதப் பார்ப்பனர்கள் கையொப்பமிட்டு, தில்லைக் கோயிலில் தீட்சதர்கள் செய்யும் அட்டூழியங்களை, ஊழல்களைப் பட்டியல் போட்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இந்தியப் பிரதமர், காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆகியோர்க ளுக்கு புகார் மனு கொடுத்திருந்தனர். அந்தப் புகார் மனுவில் கண்டுள்ளவைதான், சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.வி. சாமிநாதன் அவர்களால், சட்டப்பேரவையில் எடுத்துக் கூறப்பட்ட மேற்கண்ட தகவல்களாகும். தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைத் தொகுப்புகளில் பதிவாகியிருக்கும் உண்மைத் தகவல்கள் இவை.தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர் என்று கதை கட்டி வைத்துள்ளனர். அதற்கொரு புனை சுருட்டுக் கதையும் அவர்களிடம் உண்டு. கயிலாயத்திலிருந்து இந்த மூவாயிரம் பேர்களையும் சிவபெருமானே அழைத்து வந்தாராம்.
படைத்தல் கடவுளான பிரம்மா, தில்லையிலிருந்து மூவாயிரம் தீட்சதர்களை யோகத்திற்காகக் காசிக்கு அழைத்துச் சென்றாராம். அப்பொழுது தில்லையில் உள்ள கடவுள், அவர்களை மீண்டும் தில்லைக்கே அழைத்தாராம்!அதன்படி அவர்கள் அனைவரும் தில்லைக்குத் திரும்பினார்களாம். மூவாயிரம் பேர் களில் ஒருவர் குறைந்தாராம்.குறைவாகக் காணப்படும் அந்த ஒருவர் வேறு யாருமல்லர். நான் தான் என்று தில்லையில் கூத்தாடும் நடராசப் பெருமான் கூறினார் என்று கதை எழுதி வைத்துள்ளனர். அற்புதங்களைச் சொன்னால்தானே பாமர மக்கள் மதிப்பார்கள்?
தில்லை நடராசனும், தீட்சதர்களும் ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவர்கள் என்று நம்ப வைக்கத்தான் இந்தக் கட்டுக்கதை.
1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியின்போது, இந்து அற நிலையத்துறை உருவாக்கப்பட்டு, கோயில் கள் பார்ப்பனப் பெருச்சாளிகளின் ஏகபோகத்தில் சுரண்டப்பட்டதிலிருந்து காப்பாற்றிட வழி செய்யப் பட்டது.

அந்த நேரத்தில், அந்தச் சட்டம் தில்லைக் கோயிலைக் கட்டுப்படுத்தாது என்று தில்லைவாழ் பார்ப் பனர்கள் அடம் பிடித்தனர்.
அறநிலையத்துறை தலைவராக இருந்தவர், நீதிபதி சதாசிவ அய்யர் என்பவர் ஆவார். தில்லை தீட்சதர்கள் கொடுத்த மனுவின் மீது திரு. சதாசிவ அய்யர் அளித்த தீர்ப்பு முக்கியமானது (3.1.12.1925).
“இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிர வேறு சொத்துகள் எதுவுமேயில்லை என்று பொது தீட்சதர்கள் சொல்லுவதும், இந்த ஆலயத்திற்கு எந்தவிதக் கட்ட ளைகளும், வருவாய் தரும் இனங்களும் இல்லை யென்று சொல்லுவதும் சரியல்ல. ஆகவே, பொது தீட்சதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்து உள்ளனர். மேற்கண்ட ஆலயத்திற்கு எவ்வித வரவு – செலவு கணக்குகளையும் வைக்காமல், பொது தீட்சதர்கள் நம்பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டிற்கும் உள்ளாகிறார்கள்” என்று இந்து அறநிலையத்துறைப் பாதுகாப்புக் குழுத் தலைவராக இருந்த திரு. சதாசிவ அய்யரே அறிக்கை கொடுத்த பிறகு, இந்தக் கோயில் தீட்சதர்களின் நாணயம், ஒழுக்கம், நேர்மை எத்த கையது என்பது அம்பலத்திற்கு வந்துவிட வில்லையா?
1887 இல் இந்தக் கோயில் தீட்சதர்களிடையே இரு கட்சிகள் ஏற்பட்டன. குத்தகை வசூல், சிப்பந்திகளுக்கு ஊதியம், ஆலயம் பழுது பார்த்தல், கோயில் திருவிழா நடத்துதல் ஆகியவற்றிற்குச் செலவு செய்தல் தொடர் பாக ஏற்பட்ட பிணக்கு அது.
வழக்கு நீதிமன்றம் சென்றது. தென்னார்க்காடு மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று (ஓ.எஸ். எண் 7/1887), அதன்பின் சென்னை – உயர்நீதிமன்றத் திற்கு வழக்கு சென்றது.

1888 இல் நடைபெற்ற இந்த வழக்கினை திருவாரூர் டி. முத்து சாமி அய்யர், ஷெப்பர்டு (Shepherd) என்ற வெள்ளைக்காரர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது; என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது?
“முதற்காலந் தொட்டே இக் கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோகப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில் தீட்சதர்களின் சொந்தச் சொத்து என்பதற்குச் சிறு துளியும்கூட ஆதாரம் கிடையாது” என்று அடித்துச் சொல்லி விட்டார்கள்.
கணவன் மனைவியை அடிக்கலாம் என்று ஒரு வழக்கில் தீர்ப்புக் கூறிய முத்துசாமி அய்யரே, தீட்சதர் தொடர்பான இந்த வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பைக் கூறிவிட்டாரே! – முத்துசாமி அய்யர் என்ன “சுனா” ”மானா”வா? வெகு காலத்திற்குமுன் கூடப் போக வேண்டாம் – தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் கோயிலை அரசு கையகப்படுத்தியது. அதனை எதிர்த்து கோயில் பெருச்சாளிகளான தீட்சதர்கள் நீதிமன்றம் சென்றனர்.

எத்தனை மடங்கு கொள்ளை!
நீதிமன்றத்திலே அவர்கள் கொடுத்த கணக்கு, குபீர் சிரிப்பை வரவழைக்கக் கூடியதே கோயிலுக்கு ஆண்டு வருவாய் ரூ.37,199. செலவு ரூ.37,000 – மீதி ரூ. 199 (பேட்டா விலைபோல் இருக்கிறதா?) அதே நேரத்தில், அக்கோயிலை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு கையகப்படுத்தியபோது, 15 மாத வருமானம் ரூ.25,12,485.
1983-இல் காசி விசுவநாதர் கோயில் திருட்டுப்பற்றி பிரபலமாகப் பேசப்பட்டது.
காசி விஸ்வநாதர் கோவிலில் திருட்டு, சிவலிங்கம் பதிக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள 2 கிலோ தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. திருடர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிடிபட்டார்கள். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை அதிகாரி கோவிலின் உள்ளே இருப்பவர்கள் உதவி இல்லாமல் வெளியிலிருந்து வந்து திருட முடியாது என்றார்
திவாரி என்ற பார்ப்பன தர்மகர்த்தா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் வெளிவந்தவர். கோவிலின் கர்ப்பக்கிரக கதவின் பூட்டு உடைக்கப் படாமலே திறக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னால் இரண்டு மிகப்பெரிய இரும்புக் கதவுகள் உள்ளன. அவைகள் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன. இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய பார்ப்பன இரண்டு அர்ச்சகர்கள் இரவு தூங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
அப்போதே நாராயணக் கடவுளின் வெள்ளி கிரீடமும் களவாடப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும். இந்த மிகப்பெரிய திருட்டு! கோவிலின் உள்ளேயே கருவறைக்குள்ளேயே எந்த சேதமும் இல்லாமல் நடந்திருக்கிறது. இது புதியதல்ல. இந்த மாதிரி திருட்டுகள் பலமுறை இந்த கோவிலில் நடந்து இருக்கிறது. இது ஆறாவது திருட்டு ஆகும். ஒவ்வொரு தடவையும் திருட்டு நடந்த பிறகு அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுவார்கள். பிறகு கோவில் நிர்வாகம் அவர்களை வேலை நீக்கம் செய் யும். ஆனால் அப்படி வேலை நீக்கம் செய்யப்பட்ட, திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட அர்ச்சகர்கள் பிறகு திரும்பவும் அர்ச்சகராக வேலைக்கு சேர்த்துக் கொள் ளப்படுவார்கள். அதுவும் யாரால்? அந்த தர்மகர்த்தா குழுவின் அங்கத்தினரால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
கோவிலுக்கு மிக நெருங்கியவர்கள் சொல்லு கிறார்கள். பெரிய பெரிய கொள்ளைகள், திருட்டுக்கள் இந்தக் கோவிலின் உள்ளே நடந்து கொண்டிருக்கின்றன. கோவில் கதவின் விளிம்பில் உள்ள வெள்ளியைச் சுரண்டி எடுத்து விட்டார்கள். கோவில் துவஜ ஸ்தம் பத்தில் உள்ள தங்கத்தை எடுத்து விட்டார்கள். வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்டிருந்ததைக் காணோம். நந்திக்கு உள்ள விலை உயர்ந்த வெள்ளி நகைகளைக் காணோம். இதை எல்லாம் யாரைப் போய்க் கேட்க? என்கிறார்கள்.


யார் கட்டியது?

மாதம் 60,000 ரூபாய் வருமானம் உள்ள கோவில் அது. ஆனால் இதற்கு ஆதாரங்களோ தஸ்தாவேஜு களோ எதுவும் இல்லை. வரவு செலவுக்கு ஆதாரபூர் வமான ரசீதுகள் இல்லை. அந்தக் கோவிலுக்கு என்ன நகைகள், சொத்துக்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் இல்லை. எத்தனைப் பேர் அங்கே வேலையிலிருக் கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனால் பார்ப்பன தர்மகர்த்தா குழுவினர் சொல்லுகிறார்கள் தின வருமானம் கோவிலுக்கு 70 ரூபாய் மட்டும்தானாம்.
அந்தக் கோவிலே தனிப்பட்ட நான்கு பேருக்கு சொந்தமாம். ராமசங்கர், கிருஷ்ணசங்கர், விஜயசங்கர், கைலாசபதி என்கிற நால்வர்தான் அந்தக் கோவிலின் சொந்தக்காரர்கள். (இவர்களா அந்தக் கோயிலைக் கட்டினர்) யார் நிர்வாகத்தை நடத்துவது என்று இவர்களுக்குள்ளேயே தகராறு. உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக் கோவில்களில் கடவுளர் சிலைகளும் நகைகளும் திருட்டுப் போகிறது. இதற்கு யார் காரணம்? அர்ச்சகர் களின் உதவியினால்தான் பெரும்பாலான இந்த திருட்டுகள் நடைபெறுகின்றன.
திருச்செந்தூர் உண்டியல் விவகாரத்தில் ஒரு கொலையே நடந்திருக்கிறது. முருகன் சந்நிதானத்தில் கடவுளின் சொத்துகளை அறங்காவலர் குழுவினரே கொள்ளை அடித்திருக்கிறார்கள்
சில முக்கிய கோயில்களில் நடைபெற்ற கொள்ளை கள் பற்றிய விவரங்கள் இதோ:
1. சிதம்பரம் நடராஜர் கோவில் கொள்ளை
1993 அக்டோபரில் ரூ.1,27,500. மதிப்புள்ள வைரத் தொங்கல் நகை களவு போனது. களவுக்குக் காரண மானவர்கள், பூசை செய்கிற சுமார் 300 தீட்சிதர்களுக்கு (பார்ப்பனர்கள்) மத்தியில்தான் இருக்கவேண்டும் என்று கைலாச சங்கர தீட்சிதர் என்பவரே பத்திரிகை யில் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் இது தொடர்பாக இன்னும் தீட்சிதர்களின் மேல் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் தீட்சிதர்களைத் தண்டிப்பது ஆண்டவனையே தண்டிப்பது போல என்ற மத நம்பிக்கையே! (‘ஜுனியர் விகடன்’ 20.07.1994, 05.10.1994, 19.02.1995) சிதம்பரம் நடராசர் கோயில் இந்து அற நிலையத் துறைக்கு உட்பட்டதன்று.
2. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கொள்ளை
18.02.1995 அன்று இக்கோயிலில் ரூ.ஒரு கோடி பெறுமானமுள்ள நகைகள் களவு போனது. கொள் ளைக்குக் காரணமானவரான கிருஷ்ணன் நம்பூதிரி (பார்ப்பனர்) என்ற அர்ச்சகர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்த அப்பகுதி இந்து முன்னணி தலைவர்களும் கொள் ளைச் சம்பவத்தைக் கடத்தல் கூட்டத்தோடு தொடர்பு படுத்துகிறார்களே அன்றி, அர்ச்சகர்களைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. இந்நிலையில் காவல்துறை விசாரணை ஒருபக்கம் நடக்க, இன்னொரு புறம் தேவ பிரசன்னம் போட்டு (சோதிடம் மூலம்) கொள்ளை பற்றிய விவரம் அறிய முயற்சி நடந்ததாம். இதன் முடிவாக கிடைத்த விவரப்படி கோயிலில் உள்ள தெய் வத்தின் சக்தி குறைக்கப்பட்டுள்ளதாகவும், சுவாமியின் தோள், கழுத்து ஆகிய பகுதிகளில் சுரண்டி, உடலில் உள்ள தங்கத்தை உரித்துள்ளதாகவும் தெரிய வந்ததாம். (ஜுனியர் விகடன் 01.03.1995, 19.03.1995, மாலைமலர் 19.05.1995)
3. மதுரை அழகர்மலை கள்ளழகர் கோயில் கொள்ளை
03.08.1994 ‘ஜுனியர் விகடன்’ வார இதழ் அழகர் கோயில் கொள்ளை பற்றி விவரிக்கிறது. இக்கோயிலின் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு இதற்குப் பதிலாகத் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்துவிட்டதாக அக்கோயிலின் ராமசாமி பட்டர் என்பவர் குற்றம் சாட்டப்படுகிறார். இதே குற்றச்சாட்டை மதுரையில் உள்ள இந்து பக்த ஜன சங்க தலைவர் தியாகராஜனும் கூறுகிறார்.
ஆனால், பட்டர் செல்வாக்கு உள்ளவர் என்பதால் அவர் கைது செய்யப்படாமலும், பணி நீக்கம் செய்யப் படாமலும் தொடர்ந்து வேலை பார்ப்பதாகவும், பத்திரிகைச் செய்தி கூறுகிறது.
4. மதுராந்தகம் ஏரிகாத்த
ராமர் கோவில் கொள்ளை
பல லட்சம் மதிப்புள்ள நகைகள் 01.02.1995 அன்று இக்கோயிலில் கொள்ளை போயினவாம். இதற்கு முன்னும் பல திருட்டுகள் நடந்திருந்தாலும், திருட்டுப் போன பொருளுக்குப் பதில் வேறு பொருள்களை வாங்கி வைத்து விடுவார்களாம் அர்ச்சகர்கள். திருடியதாகச் சந்தேகப்படும் நபரும், ஓர் அர்ச்சகரும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்களாம். திருட் டைக் கண்டுபிடிக்க காவல்துறை நாய் வரவழைக்கப் பட்டும் நாய்களை சாமி சிலைக்கு அருகே அனுமதிக்க அர்ச்சகர்கள் மறுத்துவிட்டனராம். (சாமி சிலைகளை அசிங்கப்படுத்துகிறதோ, இல்லையோ, நாய்கள் தங்களை அசிங்கப்படுத்திவிடும் என்பதாலோ) இன் னும் விசாரணை நடந்து கொண்டுள்ளதாம். (ஜுனியர் விகடன் 08.02.1995)
5. நெல்லையப்பர் கோயில் கொள்ளை
780 கிராம் எடையுள்ள வெள்ளி நகை இக்கோயிலில் காணாமல் போனதாகவும், இது தொடர்பாக இரண்டு அர்ச்சகர்கள் கைதானதாகவும் 27.02.1992 ‘தினமணி’ பத்திரிகை தெரிவிக்கிறது.
6. பொன்னேரி கிருஷ்ணப் பெருமாள்
கோவில் கொள்ளை
இக்கோயில் கருட வாகனத்தில் தங்கத் தகடுகள் களவு போனதாம். திருடர்கள் கோயிலுக்குள்தான் இருக்க வேண்டும் என அறநிலையத்துறைத் துணை ஆணையர் கூறினாராம். (‘ஜுனியர் விகடன்’, 14.10.1992)
(தொடரும்)

No comments:

Post a Comment