பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை அறிய 20 வகையான அறிவுறுத்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை அறிய 20 வகையான அறிவுறுத்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

featured image

புதுக்கோட்டை, டிச.12- புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று (11.12.2023) செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘மழையில் புத்த கங்கள் நனைந்து விட்டது என்று சொன்னால் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. புத்தகங்கள் எப்போதும் இருப்பு வைத் துள்ளோம். அதனால் அந்த புத்த கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

அதனால்தான் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு கூட 13ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலை வேலையில் மாணவர்கள் கூடும் பொழுது அவர்கள் எவ்வாறு பாது காப்பாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கி விட்டு தான் வகுப்பறைக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.
அந்த வகையில் மாணவர்கள் ஒரு நல்ல மனநிலையில் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர். மழை பெய்த 4 மாவட்டத் தில் உள்ள பள்ளிக் கூடங்களில் கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் இருக்கிறதா என்பதை அறிய 20 வகையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில், இன்னும் 32 பள்ளிகளில் பணி செய்ய வேண்டியது உள்ளது.

பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு அங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் விடுமுறை விடும்பொழுது அதனை ஈடு செய்ய அடுத்தடுத்து வரக்கூடிய சனிக்கிழமைகளில் பள்ளிகளை வைத்து தான் அந்த விடுமுறையை ஈடு செய்வோம்’ என்றார்.

No comments:

Post a Comment