புதுடில்லி,டிச.8- சமூக பாகுபாடு காரணமாக, தற்கொலை செய்து கொண்ட எஸ்.சி., எஸ்.டி. மாண வர்கள் பற்றிய தரவுகள் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் 2019 முதல் – 2021 வரை
35 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக மக்களவை யில் ஒன்றிய அமைச்சர் அப்பையா நாராயணசாமி கூறினார்.
இதுதொடர்பாக மக்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய சமூகநீதித்துறை இணையமைச்சர் அப்பையா நாராயணசாமி கூறிய தாவது:-
உயர்கல்வித் துறையானது ஆலோசனைக் கலங்கள் மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர் களின் செல்கள், சம வாய்ப்புக் கலங்கள், மாணவர்களின் குறை தீர்ப்புக் கலங்கள், மாணவர்களின் குறைகேட்புக் குழு மற்றும் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவ னங்களில் தொடர்பு அதி காரிகளை நியமித்துள்ளது.
‘தீண்டாமை’ நடைமுறையில் இருந்து எழும் எந்தவொரு ஊனத்தையும் அமல்படுத்துவ தற்கான தண்டனையை பரிந் துரைக்கும் குடிமை உரிமைகள் (றிசிஸி) சட்டம், 1955, மற்றும் பட்டி யலிடப்பட்ட ஜாதி மற்றும் பட்டி யலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட் டம், 1989 நடைமுறையில் உள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உட்பட உறுப்பினர்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங் களைத் தடுக்க வேண்டும்
கடந்த 2019-ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 335 மாணவர்களும், 2020-ஆம் ஆண்டு 12 ஆயிரத்து 526 மாணவர்களும், 2021-ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 89 மாணவர் களும் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். சமூக பாகுபாடு காரண மாக, தற்கொலை செய்து கொண்ட எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பற்றிய தரவுகள் இல்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.
Friday, December 8, 2023
2019-2021 காலத்தில் 35,000 மாணவர்கள் தற்கொலை மரணம் ஒன்றிய அமைச்சர் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment