வேலியே பயிரே மேய்கிறது - ரூபாய் 20 லட்சம் பணத்துடன் காரில் விரைவாக சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

வேலியே பயிரே மேய்கிறது - ரூபாய் 20 லட்சம் பணத்துடன் காரில் விரைவாக சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது!

திண்டுக்கல், டிச. 2-  அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அது குறித்த விசாரணை அம லாக்கத்துறையிடம் வந்துள் ளது பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறிந்து வந்துள்ளார்.

இந்த வழக்கிலிருந்து மருத் துவரை விடுவிக்க அமலாக் கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ‌ரூ.3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவர் சுரேஷ் பாபு தரமறுக்கவே, கண்டிப் பாக ரூ. 51 லட்சமாவது அன் பளிப்பாகத் தரவேண்டும் எனக் கூறி மிரட்டி உள்ளார்.

இதனை அடுத்து 01.11.2023 அன்று திண்டுக்கல் - நத்தம் சாலையில் வைத்து ரூ.20 லட் சத்தைக் கொடுத்துள்ளார், மருத்துவர் சுரேஷ் பாபு. இதனை அடுத்து நவம்பர் 30 அன்று இரவு மீதி ரூ.31 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.  

இதனால் வெறுத்துப் போன மருத்துவர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவல கத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட் டுக்களை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப் பினர்.

பின் மருத்துவர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் தோமையார் புரம் அருகே நின்றுகொண்டு இருந்த அமலாக்கத்துறை அதி காரியின் காரில் பணத்தை வைத்து உள்ளார். 

இதனையடுத்து அமலாக் கத்துறை அதிகாரி காரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விரட்டிச்சென்று கொடைரோடு டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து 12 மணி நேரம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தற்போது ரூ.51 லஞ்சம் பெற்ற திவாரி தற்போது மது ரையில் அமலாக்கத்துறை அதி காரியாகப் பணியாற்றி வந்தி ருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அமலாக்கத்துறை அதி காரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மது ரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்த சென்றனர். ஆனால் அங்கு சோதனை நடத்த மறுக்கப்பட் டது. பின்னர் அங்கித் திவாரி அலுவலகத்தில் மட்டும் சோதனை நடத்த அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திண் டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை  காவல்துறையினர் ஆஜர்படுத் தினர்.

இதனைத் தொடர்ந்து மது ரையில் உள்ள அங்கித் திவாரி யின் வீட்டில் சோதனை நடத் தியதை தொடர்ந்து மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று (1.12.2023) மாலை 6 மணிக்கு தொடங்கிய நிலையில் விடிய விடிய சோதனை நடத்தப் பட்டது.

அப்போது பாதுகாப்பிற் காக 100க்கும் மேற்பட்ட காவல் துறை யினரும், 50க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப்  படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டனர். இதை தொடர்ந்து அம லாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையின்போது அங்கிட் திவாரிக்கு தொடர்புடைய  பல்வேறு முக் கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட் டன.

இதேபோன்று அம்ரித் திவாரி லஞ்சம் பெற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர் களுக்கு தொடர்புள்ளதா என் பது குறித்தும் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவ லகத்தில் அம்ரித் திவாரி பயன் படுத்திய அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஞிஷிறி சத்யசீலன்  தலைமையிலான அதிகாரிகள் நேற்று  மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய அதி காலை 6 மணியை கடந்தும் 12 மணி நேரத்தை தாண்டி சோத னையில் கட்டுகட்டாக ஆவ ணங்களை கைப்பற்றிய நிலையில் பல்வேறு லேப்டாப்கள் உள் ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை யும் கைப்பற்றி சோதனையில் ஈடு பட்டுவருவதால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது. 

இதேபோன்று கைது செய் யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியின்  வங்கிக் கணக்கு பண பரிவர்த்தனை, மெயில் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் குறித்தும், ஆவணங்களில் பதிவிட்டுள்ள தகவல்கள் மற்றும் அங்கித் திவாரி கையாண்ட வழக்குகளுக்கான ஆவணங் களையும் கைப்பற்றி சோதனை நடத்தினர். முன்னதாக சோத னையின் போது ஆவண பணி களுக்காக பிரிண்டர் எடுத்து செல்லப்பட்டு சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங் களை நகல் எடுத்தனர் என் பதும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment