புதுடில்லி, டிச. 7 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2 ஆயிரத்து 623 பெருமுதலாளிகள் சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 049 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் உள்ளதாக மோடி அரசு தெரி வித்துள்ளது.
இதனை சமரசத் தீர்வு மய்யங்கள் மூலம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு வதாகவும் மழுப்பலாக பதிலளித்துள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4 ஆம் தேதியன்று தொடங்கிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ‘‘பெற்ற கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்த தவறுபவர்கள் (Wilful Defaulters) மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?” என்று கேட்டிருந்தார்.
அவ்வாறு திருப்பிச் செலுத்தாத நபர்கள் மற்றும் அவர்கள் பாக்கி வைத்துள்ள தொகை எவ்வளவு? என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு ஒன்றிய நிதித்துறை இணைய மைச்சர் டாக்டர் பகவத் கராட் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
‘‘இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப் பட்ட தகவல்களின்படி, அதிக காலதாமதம் அல்லாத, திருப்பி செலுத்தத் தவறிய கடன் தொகையை, வங்கிகள் மீண்டும் வசூலிப்பதற்கு ஏதுவாக சமரசத் தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சமரசத் தீர்வானது, ஒரு சரியான முறையாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஒட்டுமொத்த வெளிப்பாட்டு தொகை கொண்ட எல்லா கடனாளிகளின் குறிப்பிட்ட கடன் தகவல்களை, மத்திய பெரிய கடன் பற்றிய தகவல் களஞ்சியத்திற்கு(Central Repository of Information on Large Credits – CRILC) பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
31.3.2023 அன்று மேற்படி களஞ்சியத்தின் படி 2623 தனித்துவமான கடனாளிகளை, ‘வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தத் தவறு பவர்கள்’ (‘Wilful Defaulters’) என வகைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பட்டியலிடப் பட்ட வங்கிகளிடத்தில் வைத்துள்ள ஒட்டு மொத்த நிலுவைக் கடன் ரூ. ஒருலட்சத்து 96 ஆயிரத்து 049 கோடி என அறிவிக்கப் பட்டுள்ளது.”
இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
Thursday, December 7, 2023
பெருமுதலாளிகள் 2 ஆயிரம் பேர் வைத்துள்ள கடன் பாக்கி மட்டும் ரூ.2 லட்சம் கோடி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment