திராவிடர் மாணவர் கழகம் தோன்றிய நாள் (1943) இந்நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

திராவிடர் மாணவர் கழகம் தோன்றிய நாள் (1943) இந்நாள்!

மீண்டும் சேரன்மாதேவியா? வெகுண்டெழுந்த பெரியார்  

திராவிடர் மாணவர் கழகம் துவங்கியது

குடந்தை அர சினர் கல்லூரியில் தண்ணீர்ப் பானை வைப்பதில், பார்ப் பனர் களுக்குத் தனி தண்ணீர்ப் பானை, மற்றவர்களுக்கு தனி தண் ணீர்ப் பானை என்றிருந் ததை போட்டு உடைத்து - அதிலி ருந்து முளைத்தது தான் திராவிட மாணவர் கழகம். 

திராவிட மாணவர் கழகமானது  1944 இல் திராவி டர் கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே உருவான ஒன்று ஆகும். தவமணிராசன் என்பவர் 1943 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் திராவிடர் மாணவர் கழகத்தைத் தொடங்கினார்.

1.12.1943 அன்று அறிஞர் அண்ணா திராவிடர் மாணவர் கழகத்தைத் துவக்கி வைத்தார்.  இக்கழகத் தைத் தோற்றுவித்தவர்களுள் முக்கியமானவர்கள் தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்), கோ. லட்சுமணன், இராமதாசு போன்றவர்கள் ஆவார்கள்.

இதே ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திலும் திராவிட இன உணர்வுடைய மாணவர்கள் பகுத்தறிவு இளைஞர் கழகத்தைத் துவக்கினர். நெடுஞ்செழியன், அன்பழ கன், செழியன், மதியழகன், இளம்வழுதி, நன்னன், சரவணன் போன்ற இளைஞர்கள் இதில் ஈடுபட்டனர்.

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கும்ப கோணத்தில் திராவிட மாணவர் கழக முதல் மாநாடு நடத்தப்பட்டது.

 "மாணவக் கண்மணிகளே, திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?" என்னும் நூல் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்டு, திராவிடர் கழகப் பதிப்பாக வெளியிடப்பட்டது. அப்போது ஆசிரி யருக்கு வயது 11  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment