சென்னை நவ.3 சென்னையில் புயல் மீட்பு பணிகளில் 18 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில்
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை மற்றும் புயல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது. இதையொட்டி, மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று (2.12.2023) சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை களை வழங்கினார். அப்போது, மீட்பு பணிகளுக்கான கருவிகளை அவர் பார் வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை காவல்துறையினர் சார் பில் மீட்பு பணிக்குழு தயார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழுபோல, தற்போது, சென்னை காவல்துறையினர் சார்பில் மாவட்ட பேரிடர் குழு உள்ளது. இந்த குழுவில் 10 பேர் உள்ளனர். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் இந்த குழு தயார் நிலையில் இருக்கும். ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்கள், ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், தனித்துவமான ஜாக்கெட்டுகள், கயிறு உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு மீட்பு குழுக்கள்
இந்த குழுவில் ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர். அதேசமயம் சிலர் புதிதாக பயிற்சி பெற்று வந்துள்ளனர். சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் புயல் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், 2,500 போக்குவரத்து காவல்துறையினர், 2 ஆயிரம் ஊர் காவல் படையினர், 200 ஆயுதப்படை காவல்துறையினர், 100 போக்குவரத்து வார்டன் ஆகியோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், காவல் மருத்துவமனையில் இருந்து, சிறப்பு மருத்துவ உடனடி சிகிச்சை மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காவல் ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர செயலாக்க மய்யம் தொடங்கப் பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவி மய்யங்கள் செல்லும் வகையில் சாலைகளில் கிரீன் காரிடர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். காவல் துறை அவசர உதவிக்கு பொதுமக்கள் 100 அல்லது 112 மற்றும் சென்னை மாநகராட்சி உதவிக்கு 1913, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவுக்கு 101 எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
அனைத்து காவல் ரோந்து வாக னங்களிலும் மருத்துவ உதவிக்காக முதலுதவி பெட்டிகள் வைத்துக் கொள்ளவும், டார்ச் லைட், கயிறு, ஒளிரும் விளக்குகள், குடிநீர் பாட் டில்கள் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2.12.2023 அன்று மாலையில் இருந்தே விட்டுவிட்டு கனமழை நீடித்து வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை காவல் துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:
புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின்போது வெளியயே செல்வதை தவிர்க்கவும். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொதுப் போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும். இடி, புயலின்போது எலக்ட்ரானிக் சாத னங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மின்கம்பங்கள். கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக் கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும், விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும், அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
👉வாகனங்களை மெதுவாகவும் கவன மாகவும் ஓட்டவும்.
👉வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும்.
👉தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
👉வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.
👉வாகனங்களில் செல்லும் போது குறிப்பிட்ட
👉பின்பற்றவும், பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்.
👉வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
👉மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
👉பயணத்தை முன்கூட்டியே திட்ட மிடுங்கள்.
👉வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.
👉சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.
👉அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100-அய் அழைக்கவும்.
சென்னை பெருநகர காவல் துறை யினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயா ராக உள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment