லக்னோ, டிச.7- உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16,000த்திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம் பெறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக் கையாக உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் முகவரி களைச் சோதனையிடும் பணி தேர்தல் ஆணையத்தால் நடத் தப்பட்டது. இதில் நான்கில் ஒரு துப்பாக்கி உரிமம் தவறான முகவரியைக் கொண்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோரக்பூரில் உள்ள 21,624 துப்பாக்கி உரிமையாளர்களில் 16,162 பேர் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இல்லாததும், அதில் 7,955 துப்பாக்கி உரிமை யாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கி உரிமை யாளர்கள் தங்களது புதிய முக வரியை உரிமத்தில் புதுப்பிக்க தவறியிருக்க வேண்டும் அல்லது போலியான முகவரியின் மூலம் துப்பாக்கி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப் படுகிறது.
வரும் மக்களவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து துப்பாக்கி உரிமை யாளர்களையும் கண்டுபிடித்து அவர்களது புதிய முகவரிகளை உரிமத்தில் இணைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குற்றங்களில் ஈடுபடுபவர்களின் துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்படும் என ஆணை யம் உத்தரவிட்டுள்ளதாக கூடு தல் காவல்துறை தலைமை இயக் குநர் அகில் குமார் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment