தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
சென்னை டிச.27 புதிய வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் பரிசோதனைகளை மேற் கொள்ள 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் உபகர ணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
கோவா, மகாராட்டிரா, கருநாடகா, தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் ஜேஎன்.1 வகை கரோனா வைரஸ் தொற்றுஇருப்பதை ஒன்றிய அரசு உறுதிபடுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு அறிவுறுத்தல்: கரோனா பரவல் குறித்து மாநிலஅரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள ஒன்றிய சுகாதாரத் துறை, அறி குறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறி வுறுத்தி யுள்ளது.
அதைத்தொடர்ந்து, தமிழ் நாட்டில் அறிகுறிகள் உள்ளோ ருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்துமாறு பொது சுகா தாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலை யில் தினமும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை மற்றும் குளிர் காலங்களில் கரோ னாவை போலவே அறிகுறிகள் கொண்ட இன்ஃப்ளூயன்சா, டெங்கு, சிக்குன்குனியா தொற் றுகள் அதிகமாகப் பரவுகின்றன. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கட்டுக் குள்தான் உள்ளது. ஆனாலும், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரி சோதனை செய்யப்படுகிறது. அதற்காக 1.5 லட்சம் உபகரணங்கள் இருப்பில் வைக்கப் பட்டுள்ளன.
மாவட்டங்களுக்கு வழங்கல்: சென் னையில் மட்டும் 30 ஆயிரத் துக்கும் அதிக மான உபகரணங்கள் உள்ளன. மாவட்டங் களுக்கும் போதிய எண்ணிக்கையில் ஆர்டி பிசிஆர் உபகரணங்கள் வழங்கப்பட் டுள்ளன. கரோனா தொற்று பாதிப்பு அதி கரித்தால் அதனை எதிர் கொள்வதற்கு கூடுதலாக உப கரணங்களை வழங்குமாறு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் வலியுறுத்தப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment