வெள்ளத்தில் சிக்கிய 136 கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

வெள்ளத்தில் சிக்கிய 136 கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு

featured image

சென்னை, டிச. 10- பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கிய 136 கர்ப்பிணிகளை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ள தாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 154 பேரையும் காப்பாற்றி அவசர கால மருத்துவ உதவி அளித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக 108 ஆம்பு லன்ஸ் நிர்வாக மண்டல இயக்க மேலாளர் முகமது பிலால் கூறிய தாவது:

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பின் போது அவசர கால மருத்துவ உதவிகள் தடைபடக் கூடாது என்பதற்காக அனைத்து முன்னேற் பாடுகளையும் நாங்கள் மேற் கொண்டிருந்தோம்.
அதன்படி, சென்னையில் மட் டும் 264 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருந்தன. புளியந்தோப்பு, வேளச் சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட வெள் ளம் சூழும் பகுதிகளில் முன்னேற் பாடாக அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களில் மொத்தம் 1,219 பேர் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர் களில் 136 பேர் பிரசவ காலத்தை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்த தவிர, மூச்சுத் திணற லால் பாதிக்கப்பட்ட 154 பேரை யும், மயக்கடைந்த 176 பேரையும் மீட்டு மருத்துவமனைகளில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேர்த் துள்ளனர்.
வெள்ளம் தேங்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தாங் களே தயாரித்த தற்காலிக படகுகள் மூலம் சென்று அவசர கால மருத் துவ உதவிகளை வழங்கினர்.
இப்பணிகளில் 500-க்கும் மேற் பட்டோர் ஈடுபட்டனர். சில இடங்களில் நுரையீரல் பாதிப்புக் குள்ளான நோயாளிகளுக்கு ஆக்சி ஜன் உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் சேவையையும் அவர்கள் மேற்கொண்டனர் என் றார் அவர்.

மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்

சென்னை மடிப்பாக்கத்தில் ‘மிக்ஜாம்’ புயல் கரையை கடந்த போது கொட்டித் தீர்த்த கனமழை யால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் அங் குள்ள ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் ஆர்ப்பரித்துச் சென் றது.

இதனால் மடிப்பாக்கம், நங்க நல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கழுத்து அளவிற்கு நின்றதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சிக்கித்தவித்த 9 மாத கர்ப்பிணியான கற்பகம் என்பவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ரப்பர் படகில் அழைத்துச் சென்று காமாட்சி மருத்துவமனையில் அனுமதித் தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத் தினர் நிம்மதி அடைந்துள் ளனர்.
கற்பகத்திற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில் 4 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிக்கு உதவிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவின ருக்கு இளம்பெண்ணின் குடும்பத் தினர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment