சென்னை,டிச.11 – சென்னை யில் மிக்ஜாம் புயல் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல மைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணத் தெகை வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. பாதிக்கப் பட்டோருக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன்கள் டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்து வழங்கப் படும். பத்து நாள்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப் பட்டு விடும்,” என்று தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட் டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 600 பேர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை நேற்று (10.12.2023) வழங்கினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை எப்போது வழங்கப்படும்?
உதயநிதி ஸ்டாலின்: இன்னும் ஒரு வாரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கத் தொடங்கி விடுவோம். முதலில் அதற்கான டோக்கனை கொடுக்க வேண்டும். சில இடங்களில் ரேஷன் கடைகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. அதை சரி செய்த பிறகு ஒரு வாரத்தில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் பிறகு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும்.
கேள்வி: சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் அமைத்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்களே?
உதயநிதி ஸ்டாலின்: எதிர்க்கட்சிகள் அப்படி சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம் நமது வேலையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கேள்வி:-சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை திருப்புகழ் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?
உதயநிதி ஸ்டாலின்: அப்படி அமைத்ததால் தான் இவ்வளவு மழை பெய்தும் 3 நாளில் மழைநீர் வடிந்து மின்சாரம் வந்துள்ளது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.
கேள்வி: மழைச் சேதத்தைப் பார்வையிட வரும் மத்தியக் குழுவிடம் என்னென்ன விஷயங்களை வலியுறுத்த இருக்கிறீர்கள்?
உதயநிதி ஸ்டாலின்: ஏற்கெனவே ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டார். அவரிடம் எவ்வளவு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் விளக்கிக் கூறியுள்ளார். தற்போது முதல் கட்ட நிதி கொடுத்து இருக்கிறார்கள். விரைவில் அடுத்த கட்ட நிதியைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
கேள்வி: சென்னையில் வெள்ளம் பாதித்த ஒரு சில இடங்களில் மாமன்ற உறுப் பினர்கள் வந்து ஆய்வு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்களே?
உதயநிதி ஸ்டாலின்: அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், மாமன்ற உறுப் பினர்கள் ஆய்வு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் சின்ன அதிருப்தி இருக்கத்தான் செய் யும். இவ்வளவு மழை பெய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கடந்த 50 ஆண்டு களில் பெய்யாத மழையாகும். ஓரளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை களத்தில் இருந்து செய்து இருக்கிறோம். முதலமைச்சர், மேயர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே களத்துக்கு வந்தனர். தன்னார்வலர்கள்கூட களத்துக்கு வந்துள்ளனர். யாரையும் நான் குறை சொல்லவில்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment