சென்னை, டிச.13 இந்தியாவில் ஆப்பிள் அய்போன் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களும் சென் னையில் இயங்கி வருகின்றன. அந்தவகையில் இந்த நிறுவனங்களுக்கு துணையாக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே கிளாஸ் தயாரிக்கும் அமெரிக்காவின் பிரபலமான கொர்னிங் நிறுவனம் சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி மதிப் பீட்டில் கொரில்லா கண்ணாடி ஆலையை சென் னைக்கு அருகேபெரம்புதூரை அடுத்த பிள்ளைப் பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
கொர்னிங் நிறுவனம் தயாரிக்கும் கொரில்லா கிளாஸ் அதிநவீன முறையில் அதிகளவில் ஆட் டோமேட் செய்யப்பட்ட கட்டமைப்பில் இயங்கக் கூடியது. இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில் 300 பேர் வேலை வாய்ப்பு பெறுவர். ஏற்கெனவே தெலங்கானாவில் ஆலையை கொர்னிங் அமைக்கும் என கூறப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை அந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கொர்னிங் நிறுவனம் தனது இந்திய கூட்டாளியான ளிஜீtவீமீனீus மிஸீயீக்ஷீணீநீஷீனீ உடன் இணைந்து நிர்வாகம் செய்ய உள்ளதால், இந்தத் தொழிற்சாலை மூலம் வருடத்திற்கு 30 மில்லியன் கொரில்லா கிளாஸ் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறி விப்பு ஜனவரி மாதம் நடைபெறும் குளோபல் இன்வெஸ்டர் மீட் கூட்டத்தில் வெளியாகும் என தெரிகிறது.
No comments:
Post a Comment