சென்னை, டிச.3 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில்மாண வர்களுக்கு தரவரிசை மற் றும் சிறப்பிடம் போன் றவை வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
பல்வேறு மாநில பாடத்திட்ட பள்ளி களில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மதிப்பெண்ணில், அதிக மதிப்பெண் எடுப்பவர் களுக்கு, முதலிடம், இரண்டாம் இடம், முதல் கிரேடு, 2ஆம் கிரேடு என, சிறப்பிடங் கள் வழங்கப்படுகின்றன.
இந்த சிறப்பிடங் களால், மாணவர்கள் மத் தியில் ஆரோக்கியமற்ற போட்டியும், மன அழுத் தமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சினையை தீர்க்க, தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட் டத்தில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பிடங்கள் மற்றும் தரவரிசைகளை நிறுத்தி, 2017ஆம் ஆண்டு உத்தர விடப்பட்டது. இதே போன்று, ஒன்றிய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யும் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் நேற்று (2.12.2023) வெளியிட்ட அறிவிப்பு: சி.பி.எஸ்.இ., நடத்தும் பொது தேர்வு களில், மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள், அவர்களின் மதிப்பெண்ணை கணக் கிடும் முறை போன் றவற்றை தெரிவிக்குமாறு, பல்வேறு அமைப்புகள் தரப்பில் கேட்கப்பட் டுள்ளன. சி.பி.எஸ்.இ.,யை பொறுத்தவரை, மாண வர்களின் மதிப்பெண் அடிப்படையில், மண்டல அளவிலோ, ஒட்டு மொத்தமாகவோ கணக்கிட்டு, சிறப்பிடங் கள் வழங்கப்படுவ தில்லை. உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், ஒரு மாணவர், அய்ந்து பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியுள்ள நிலையில், அந்த மாண வர், ஏதாவது அய்ந்து பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்ற மதிப் பெண்களை கணக்கிட் டுக் கொள்ளலாம். சி.பி. எஸ்.இ., வாரியம் சார்பில், மாணவர்களின் மதிப் பெண்களை கணக்கிட்டு, சராசரி மதிப்பெண் குறிப்பிடுவது கிடை யாது. உயர்கல்வி சேர்க் கையோ அல்லது வேலை வாய்ப்பு வழங்கலோ எது வானாலும், சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment