கேள்வி: ‘சீரங்கம் கோவில்முன் உள்ள ஈ.வெ.ரா. சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்போம்' என்று அண்ணாமலை கூறியது சர்ச்சை ஆகி உள்ளது. ஈ.வெ.ரா. எதிர்ப்பு அரசியல் பா.ஜ.க.வுக்குக் கை கொடுக்குமா?
ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பதில்: அரசி யலுக்காக இதை அண்ணாமலை சொல்லவில்லை. கோவில் முன் ‘கடவுளை நம்புகிறவன் முட்டாள், காட்டுமிராண்டி' என எழுதி சிலை வைப்பதை நாகரிக சமுதாயத்தில் யாராவது ஏற்பார்களா?
வேறு இடங்களில் சிலையை வைத்து எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் உணர்வுகளுக்கு மதிப் பளிக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நிலைப் பாடு.
(‘தினமலர்', 26.11.2023, பக். 10)
பொறுப்பான பதவியில் உள்ள ஓர் அமைச்சர் சிறீரங்கம் கோயில் முன் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை பீடத்தில் என்ன வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு பேச வேண்டாமா?
உண்மையிலேயே அங்கு பொறிக்கப்பட்ட வாசகங்கள் என்ன?
பீடத்தில் உள்ள வாசகம்
"கடவுளை மற - மனிதனை நினை!
கடவுள் இல்லை; கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை.
பக்தி என்பது தனிச்சொத்து.
ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து.
பக்தி இல்லாவிட்டால் நட்டமில்லை. ஆனால்,
ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.
- ஈ.வெ.ராமசாமி"
திருவாளர்கள் அண்ணாமலையும் முருகனும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
நீதிமன்றத்தில் என்ன பதில் சொல்லுவார்கள்?
அறிவு நாணயம் என்பதே மிக முக்கியம்!
No comments:
Post a Comment