ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அமைச்சர்கள் - புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அமைச்சர்கள் - புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

புதுச்சேரி, நவ.1- புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ஊர் வலத்தில் அமைச்சர்கள், எம்.பி. பங்கேற்றது அரசமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயக நெறி முறைகளுக்கும் எதிரானது என்று சட்டமன்ற எதிர்க் கட் சித் தலைவர் சிவா தெரிவித் திருக்கிறார். 

புதுச்சேரியில் 29.10.2023 அன்று ஆர்.எஸ்.எஸ்.  ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.பி. உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

இதுதொடர்பாக எதிர்க் கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

இந்தியாவில் சமூக நல்லி ணக்கத்தையும், சமத்துவத் தையும் சிதைக்க  பாடுபடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிக ளும், பேரவைத் தலைவரும் கலந்து கொண்டது மரபுகளை மீறும் செயலாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 99ஆ-வது ஆண்டு துவக்க நாளையொட்டி, இவர்களின் சித்தாந்தங்களுக்கு எதிராக சமத்துவத்தையும், சமூக நல்லி ணக்கத்தையும் போதித்த காந் தியார், வள்ளலார், அண்ணல்  அம்பேத்கர் பெயரில் புதுச்சேரி மாநில  ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தியிருப்பது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும்  செயல்.

கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அனுமதி மறுக் கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு ஆட்சி அதிகார பலத் தால் அனைத்து மத  மக்க ளுடன் ஒற்றுமையாக வாழும் புதுச்சேரி மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை உருவாக்கி உள்ள னர்.

புதுவை மக்கள் கலாச்சாரத் திற்கும், பன்முகத்தன்மைக்கும் துளியும் ஒவ்வாத ஒரு ஊர் வலத்தை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி கொடியசைத்து துவக்கி வைத்ததும், ஊர்வலத் தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப் பினர்களுடன் அமைச்சர் சாய் சரவணக்குமார் கலந்து கொண்டி ருப்பதும் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.

நெறிமுறைகளை மீறிய பேரவைத் தலைவர்

இவை அனைத்திற்கும் மேலாக  புதுச்சேரி சட்டமன்றத் தின் மாண்புகளையும் மரபுகளை யும் பாதுகாக்க வேண்டிய பேர வைத் தலைவர் செல்வம் இந்த ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத் தில் முன் வரிசையில் அமர்ந்து கலந்து கொண்டிருப்பது ஜனநா யக நெறிமுறைகளுக்கு எதிரான தாகும். 

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அனுமதிக்கக்கூடாது

இதை முதலமைச்சர் ரங்க சாமி கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் இது போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வ லங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மக்கள் எந்த விதத்தி லும் பாதிக்கப்பட கூடாது, சட்டம்-_ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எங்கள் இந்தியா கூட்டணி கவனமாக செயல்படுகிறோம்.

ஆனால் வேண்டுமென்றே பிரச்சினைகளை புதுச்சேரி யில் உருவாக்க ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. இவர்களின் பிரிவினைவாத கனவுகள் ஒரு போதும் நிறைவேறாது. 

அமைதிப் பூங்காவாக திக ழும் புதுச்சேரி மாநிலத்தில் காந்தியாரின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் அவர் முன் னிறுத்தி அரசியல் செய்து, கல வரத்தை ஏற்படுத்த நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத கொள்கைகளையும் முக மூடிகளையும் மக்கள் உற்று நோக்கி  வருகிறார்கள். 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பதிலை மக்கள் நிச்சயம் சொல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.


No comments:

Post a Comment