90 வயதிலும் நாள்தோறும் இயங்குவதோடு நம்மையும் நம் இனத்தையும் நாளும் இயக்கி வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உயிரோடு உணர்வோடு கலந்துள்ள இன உரிமை மீட்பு ஏடான ‘விடுதலை' நாளிதழ் சந்தாக்களை டிசம்பர் 2 அன்று 91ஆவது பிறந்தநாள் விழா காணும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்குவதற்காக பெருமளவில் விடுதலை சந்தா திரட்டும் பணியில் நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி துவங்கியது.
திராவிடர் கழக நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார் மற்றும் அவரது வாழ்விணையர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா ஆகியோர் ஓராண்டு விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கி மகிழ்ந்தார்.
தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment