போர்க்கால அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

போர்க்கால அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

புதுச்சேரி அரசுக்கு நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ. 22- புதுச்சேரி யில் போர்க்கால அடிப் படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ரங்கசாமி நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று மேனாள் முத லமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட காட்சிப் பதிவில் கூறியி ருப்பதாவது: "புதுச்சேரி யில் கடந்த 3 ஆண்டு களாக என்.ஆர்.காங்கி ரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆட்சியாளர்கள் மீனவ சமுதாய மக்களை புறக் கணிக்கிறார்கள். மத்திய பாஜகவும், புதுச்சேரி பாஜக அரசும் உலக மீன வர் தினத்தையும், மீனவர் களால் அங்கீகரிக்கப் பட்ட சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணி விப்பதையும் அரசு விழா வாக கொண்டாடுவ தில்லை. மீனவ சமுதாய மக்களுக்கு ஒன்றிய அர சில் இருந்து நிறைய திட் டங்களை கொடுக்கி றோம் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தேர்தல் வரும் நேரத்தில் மீனவர்கள் மத்தியில் பல விழாக்களை நடத்தி மீனவ மக்களை ஏமாற்றி வருகிறார்.

பாஜக கூட்டணி அரசும்

மீனவ சமுதாய மக் களை அதல பாதாளத்தில் மத்திய பாஜக அரசும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாஜக கூட்டணி அரசும் தள்ளியிருக்கிறது. புதுச்சேரியில் வன்னியர், பட்டியலினத்தவர் களுக்கு அடுத்தபடியாக மீனவ சமுதாய மக்கள் பரவலாக இருக்கின்றனர். ஆகவே மீனவ சமுதாய மக்கள் தங்களை மலை வாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கி ரஸ் ஆட்சியில் முன் வைத்தார்கள். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்த போது அப்போது ஆளுநராக இருந்த கிரண் பேடி அதனை ஏற்கவில்லை.

இப்போது மீனவ சமு தாய மக்கள் அந்த கோரிக் கையை வலியுறுத்தியி ருக்கிறார்கள். புதுச் சேரி மாநிலத்தில் உள்ள மீனவ சமுதாய அமைப்பு கள், பல அரசியல் கட்சி யில் உள்ள மீனவ சமு தாய தலைவர்கள், தொண் டர்கள் புதுச்சேரியில் மீனவ சமுதாய மக்களை மலைவாழ் மக்கள் பட்டி யலில் சேர்க்க காலதாம தம் ஆகும் என்ற காரணத் தால் அவர்களை மறுபடி யும், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட் டம் நடத்தி வருகின்றார் கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரியில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தி யாவில் பீகார் மாநிலத் தில் ஜாதி வாரி கணக்கெ டுப்பு எடுத்து ஜாதி வாரி யாக வேலை வாய்ப்பு, கல்வியில் சலுகை வழங்க முடிவெடுத்து நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் ரங்கசாமி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

பாஜக ஜாதிவாரி கணக்கெடுப்பை முழு மையாக எதிர்கின்றது. அதற்கு காரணம் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர் கள் சலுகைகளை முழு மையாக அனுபவிக்க வேண்டும். மற்ற சமுகத் தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கக் கூடாது என்பதுதான். ஜாதி வாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எல்லா மாநி லங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்திலும் சலுகை வழங்குவது என்ற நிலை இந்தியா முழுவதும் வந் திருக்கிறது.

தள்ளிப் போட முடியாது

முதலமைச்சர் ரங்க சாமியால் பல மாதங் களோ, பல நாட்களோ இதை தள்ளிப்போட முடியாது. இதற்கான கோப்பு ஏற்கெனவே பரி சீலனையில் இருக்கிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆகவே முதலமைச்சர் ரங்கசாமி போர்க்கால அடிப்படையில் ஜாதிவாரி  கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் ஜாதி, விகிதாச்சார அடிப் படையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண் டும்." என நாராயணசாமி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment