காசாவிற்குள் நுழைந்தால் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடல்தான் மிஞ்சும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

காசாவிற்குள் நுழைந்தால் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடல்தான் மிஞ்சும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை

காசா, நவ. 4-  ஹமாஸ் கட் டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் சுற்றி வளைத்து விட்ட தாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதால், காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. 

காசாவின் வடக்கு பகுதியில் கடந்த அக். 7ஆ-ம் தேதி முதல் வான் வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தற்போது தரை வழி தாக்குதலுக்கு தயா ராகி வருகிறது. காசாவில் உள்ள ஜபாலியா அகதி கள் முகாமில் இரண்டு நாளில் இரு முறை நடத் தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போர் குற்றத்துக்கு ஈடான செயல் என அய்.நா மனித உரிமைகள் அலுவ லகம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 3,760குழந்தைகள் உட் பட 9,061 பேர் உயிரிழந்த தாக காசா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போரால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள காசாவில் மனி தாபிமான நடவடிக்கை களை மேற்கொள்ள தற் காலிக சண்டைநிறுத் தத்தை அறிவிக்க வேண் டும் எனஅமெரிக்க அதி பர் ஜோ பைடன் வேண் டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண் டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மற் றொரு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காசாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தி வரு கிறார்.

இந்நிலையில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழு வதையும் இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து விட்டதாகவும், சண்டை நிறுத்தத்துக்கு தற்போது வழியே இல்லை என இஸ்ரேல்ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ் தீவிரவாத பிரிவான எசி டைன் அல்-காசம் பிரி கேட்ஸ், ‘‘காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ் ரேல் ராணுவவீரர்கள் கருப்பு பைகளில் பிணமா கத்தான் வீடு திரும்புவர்’’ என எச்சரிக்கை விடுத்து உள்ளது.


No comments:

Post a Comment