தோழர் என்.சங்கரய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

தோழர் என்.சங்கரய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை,நவ.16 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர். என்.சங்கரய்யா (102) நேற்று (15.11.2023) சென்னையில் மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது.

சிறு வியாபாரக் குடும்பத் தில் 1921ஆம் ஆண்டு பிறந்த தோழர்.என்.சங்கரய்யா பள்ளி மாணவப் பருவத்தில் நாட்டின் விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பயின்ற காலத்தில் மாணவர் களை திரட்டி போராடுவதில் பொதுவாழ்வை தொடங்கி னார். மதுரை மாணவர் சங்கம் உருவாக்கியதில் பெரும் பங்க ளிப்பு செய்தவர். இந்த அமைப்பு அனைத்திந்திய மாணவர் பெரு மன்றமாக உருவாக்கப்பட்ட போது அதன் முதல் மாநிலச் செயலாளராக பணியாற்றி யவர்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மதுரை மாவட்டத் திலும், சுற்று வட்டாரத்திலும் கட்சி அமைப்புகளையும், விவ சாயிகளையும், விவசாயத் தொழி லாளர்களையும் அமைப்புரீதி யாக திரட்டி போராடியவர். 

நாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும்  மக்கள் நலப் போராட்டங்களில் பங் கேற்று பலமுறை சிறைச் சென்றவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செய லாளராக பணியாற்றிய தோழர். என்.சங்கரய்யா, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு பெற்று, சிறப்பாக செயல்பட்டவர். 

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா ளராக நீண்டகாலம் செயல் பட்டவர்.

பொது வாழ்வுப் பணியில் முன்னோடியாக திகழ்ந்து வந்த தோழர். என்.சங்கரய்யா வுக்கு தமிழ்நாடு அரசு ‘தகை சால் தமிழர்’ விருது கொடுத்து பெருமைப்படுத்தியது.

சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்விற்கு முன்னு தாரணமாக திகழ்ந்த தோழர். என்.சங்கரய்யாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக் கும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர் களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்

தமிழ்நாடு காங்கிரசு கமிட் டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய் தியில், "கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா தனது 102ஆவது வயதில் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வும், தொழிலாளர் வர்க்கத்துக் காகவும் தமது வாழ்நாள் முழு வதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந் தவர்.

 எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக் களாக தொண்டால் பொழு தளந்த தூய்மையான தலைவர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

தோழர் என். சங்கரய்யாவின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத் துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர் களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித் துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment