நீரிழிவு கல்லீரல் நோய் தடுப்பு சிகிச்சை மய்யம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

நீரிழிவு கல்லீரல் நோய் தடுப்பு சிகிச்சை மய்யம் தொடக்கம்

சென்னை, நவ. 9 - உலக நீரிழிவு நாளை (14.11.2023)முன்னிட்டு இந் தியாவின் முன்னணி நீரிழிவு மருத் துவமனைகளில் ஒன் றான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மய்யம் மற் றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட் டளை இணைந்து நீரி ழிவு கல்லீரல் நோய்த் தடுப்பு சிகிச்சை மய் யத்தை நேற்று (8.11.2023) சென்னை கோபாலபுரத் தில்  தொடங்கியுள்ளது.

நீரிழிவு நோயாளிக ளின் கல்லீரல் சிக்கல் களை ஆய்வு செய்வதற் கும், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் தடுப்பதற்கும்,   

நீரிழிவு நோயால் கல் லீரல் பாதிப்பு அடைந்த வர்களுக்கு  உரிய சிகிச் சையும் வழங்கும் நோக்கில் இந்த நீரிழிவு கல்லீரல் மருத் துவமனை தொடங்கப் பட்டு இருக்கிறது. 

இது குறித்து, சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக் கட்டளை மற்றும் டாக் டர் மோகன்ஸ்நீரிழிவு சிறப்பு மய்யத்தின் தலை வருமான டாக்டர். வி.மோகன் கூறுகையில்:

நீரிழிவு சிகிச்சை இன்று குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வரு கிறது. அதற்கேற்ப  நீரி ழிவு  கல்லீரல் மருத்துவ மனை  தொடங்குவதன் மூலம் நீரிழிவு சிகிச் சையை மேலும் விரிவுப் படுத்தியுள்ளோம். லான் செட் நீரிழிவு  எண்டோ கிரைனாலஜியில் சமீபத்திய  மிசிவிஸி-மிழிஞிமிகிஙி  ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. அதன் படி இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதித்ததுடன், மேலும் 136 மில்லியன் மக்கள் நீரிழிவுக்கு முந் தைய  ஃப்ரீ டயாபடிஸ் என்னும் நிலையில் உள் ளனர். 

நீரிழிவு நோயின் விளைவுகளில் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் மற்றும்  நரம்பு களில் ஏற்படும்  பாதிப்பு கள் குறித்து பலரும் அறிந்திருக்கிறோம். அதே போன்று  நீரிழிவு  மற்றும் கல்லீரல் ஆரோக் கியத்துக்கும் இடையே உள்ள தொடர்பு  சமீபத் தில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. எங்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சியின் மூலம்  கொழுப்பு கல்லீரல் மற்றும் டைப்2 நீரிழிவு  நோய்க்கு இடையிலான சிக்கல்கள் 

குறித்து தொடர்ந்து  கண்காணிக்கப்படுகிறது. நமது நீரிழிவு கல்லீரல் மருத்துவமனை நோக்கம்  நீரிழிவினால்  ஏற்படும் கல்லீரல்  பாதிப்பு  தவிர்க் கும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தவும்,  நோயை நிர்வகிக்க  பயனுள்ளதாக சிகிச்சை யளிப்பதும்,  சிறப்பாக இதில் செயல்படுவதாகும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிகழ்வில், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக் கட்டளை மற்றும் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மய்யத்தின் நிர் வாக இயக்குனர், டாக் டர். ஆர்.எம். அஞ்சனா, இச்சிறப்பு மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன், கல்லீரல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அஸ்வின் கிருஷ்ணா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்.

No comments:

Post a Comment