புதுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாடகர் மீது ஜாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

புதுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாடகர் மீது ஜாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்

புதுக்கோட்டை, நவ. 20 - புதுக் கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாடகர்  பிரகாஷ் மீது, ஜாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆய்க் குடி அண்ணா நகரில் வசிப்பவர் பிரகாஷ். புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இசை  நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரபலமான பாடகர். 2019இல் ‘ஜீ தமிழ்’ தொலைக் காட்சியின் “சரி கமப” சீசன் 2-இல் போட்டியாளராக பங்கேற்றவர். 

இந்நிலையில், நவம்பர் 12 அன்று பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் கபிலன் ஆகியோர் வாராப்பூரில்  காய்கறி வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மேலுடையான்பட்டி நான்கு  சாலை அருகே, இவர்களை  பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இருவர் பிரகாஷ் மற்றும் கபிலனை வழி மறித்து ஜாதியைச் சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டியுள் ளனர். இருவரும் அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அப்போது,  மேலும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டு பிரகாசை பாட் டில்களாலும், கற்களை வீசி யும் தாக்கியுள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ள வர்கள் வந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி யுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் மற்றும் கபிலன்  ஆகி யோர் உடனடியாக  மழையூர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக்  கல் லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இதில், பிரகாஷ் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பிரகாசை சந்தித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். கவி வர்மன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத்  தலைவர் டி. சலோமி, செயலாளர் சி. ஜீவானந் தம் உள்ளிட்டோர் நடந்த விவ ரங்களைக் கேட்டறிந்தனர்.  

பிரகாஷ் அவர்களிடம்  பேசு கையில், “தாக்குதல் நடத்தியவர் களுடன் எனக்கு  எந்த அறிமுகமும் இல்லை. அந்தப் பகுதியில் நான் கச்சேரிகளில் பாடி வருவதால் என்னை அவர்களுக்குத் தெரிந் திருக்கலாம். பொதுவாக தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளை ஞர்களிடம் வேண்டுமென்றே வம் பிழுப்பதும், கிண்டல் செய்வதும் இந்தப் பகுதியில் வழக்க மாக இருந்து வருகிறது.  அவர்களின் தாக்குதல், எங்கள் மீது கொலை வெறியுடனும், மோசமான காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இருந்தது. அக்கம் பக்கத்தினர் வந்திருக்கா விட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருந்தி ருக்கும்” என்று வேதனையுடன் தெரிவித்தார். 

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பாடகர் பிர காஷ் மற்றும் கபிலன் ஆகியோர் மீது  கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டு மென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.  கவிவர்மன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment