கடந்த 27 ஆம் தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளாகும். அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை ‘விடுதலை'யில் எழுதியிருந்தார்.
அச்செய்தி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
‘‘பெரியார் திடலில் இனமான ஆசிரியர் அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெறச் சென்றிருந்தபோது, ‘திராவிட இயக்கக் கொள்கை ஜீவநதி உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துகள்’ என்று இன்றைய ‘விடுதலை' நாளிதழில் அவர் தந்திருந்த என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை என்னிடம் காண்பித்து மகிழ்ந்தார்.
என்னுடைய கொள்கைப் பிடிப்பை வரிக்கு வரி பாராட்டி எழுதியிருந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். அந்த வாழ்த்துச் செய்தியின் கடைசிவரியை, ‘வயது ஏறுவது அவருக்கு மூப்பு அல்ல முதிர்ச்சியே’ என்று முடித்திருந்தார். இதைவாழ்த்துக் கடிதம் என்பதைவிட, பெரியார் பேரனுக்கான பாடமாகவே எடுத்துக்கொள்கிறேன். இனமான ஆசிரியர் அவர்களுக்கு இனமான மாணவனின் நன்றி என்று கூறினார்.
No comments:
Post a Comment