பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் : சோனியா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் : சோனியா குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 3 பாஜக, ஆஸ் எஸ்எஸ் அமைப்புகளால் ஜனநாய கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் வரும் 7-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இது, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இத் தேர்தலில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, எதிர்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மிசோரமில் காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காணொலி செய்தி (1.11.2023) வெளியிட்டார்.

 அதில் அவர் கூறியிருப்பதாவது:

மிசோரம் மாநிலத்துடன் எனக்கு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. எனது கணவருடன் மிசோர முக்கு பலமுறை பயணம் மேற் கொண்டுள்ளேன். மிசோரம் மக் களின் பழக்கவழக்கம் மற்றும் கலாச்சாரம், அந்த நிலத்தின் அழகு மற்றும் வளம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, மிசோ ரம் மக்களின் விருந்தோம்பலும் பாசமும் என்றும் மறக்க முடியா தவை.

கடந்த 1986, ஜூன் 30-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க மிசோ அமைதி உடன்படிக்கை கையொப்ப மான பிறகு அந்த மாநிலத்துக்கு குடும்பத்துடன் நான் மேற்கொண்ட பயணம் எப்போதும் நினைவில் நிற்கும்.

பாஜக மீது குற்றச்சாட்டு 

இன்று மிசோரமிலும், வடகிழக் கிலும், நாடெங்கிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள் ளாகியிருக்கிறது. பன்முகத்தன்மை, ஜனநாயகம் மற்றும் விவாதங்களுக்கு அவர்கள் மதிப்பளிப்பதில்லை. நாடு முழுவதும் ஒரே நிலைத் தன் மையை திணிக்க விரும்புகின்றனர்.

நிலங்கள், வனங்கள் மீதான பழங்குடியினரின் உரிமைகளை பலவீனப்படுத்தும் சட்டங்களை நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாய மாக கொண்டுவருகின்றனர்.

சமூகத்தில் பிளவு

மணிப்பூரில் சமூகத்தை கடுமையாகப் பிளவுபடுத்தியுள்ளது பாஜக. ஆறு மாதங்களாகியும் அங்கு அமைதி, நல்லிணக்கத்துக் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. மணிப்பூர் விவகாரத்தில் முழு மவுனம் சாதிக்கும் பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள சிறிதும் விரும்பவில்லை.

மிசோரமில் மிஸோ தேசிய முன்னணியும், ஜோரம் மக்கள் இயக்கமும் சுதந்திரமான கட்சிகள் அல்ல. அவை பாஜகவுக்கான நுழைவாயில்களாகவே உள்ளன. பாஜகவுடன் சமரசம் செய்யாத ஒரே கட்சி காங்கிரஸ்தான். மிசோ ரமின் வளர்ச்சி, மக்களுக்கான அதிகாரமளித்தல், சமூகத்தின் நலி வடைந்த பிரிவினருக்கான பாது காப்பு ஆகிய உத்தரவாதங்களை காங்கிரசால் மட்டுமே அளிக்க முடியும். 

371-ஜி சட்டப் பிரிவை 

காப்போம்

கருநாடகம், சத்தீஸ்கர், ராஜஸ் தான், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரசால் அளிக்கப்பட்ட வாக் குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மிசோ மக்களின் வாழ்க்கை வழிமுறையைப் பாதுகாப்பதற்காக, மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 371-ஜி பிரிவை காக்க நாங்கள் எப்போதும் துணை நிற்போம். 

இது பரிசோதனைகளுக்கான நேரமல்ல; மிசோரமில் வளர்ச்சி, வளம், அமைதியை உறுதிசெய்ய காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சோனியா கேட்டுக் கொண் டுள்ளார்.

No comments:

Post a Comment