சென்னை, நவ. 18 - தமிழ்நாடு அரசு மற்றும் உலக பசுமைக் கட்டட சபையின் ஆதரவோடு சென்னையில் நவம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை "உலக பசுமைக் கட்டட மாநாடு-2023" (IGBC) நடைபெறுகிறது.
"கார்பனாக்கலற்ற செயல்பாட்டின் மூலம் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை நோக்கி முன்னேறுதல்" என்ற கருப் பொருளுடன் நடைபெறும் இம்மாநாடு, நிலைப்புத் தன்மை யுள்ள கட்டட நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவையும், கண்ணோட்டத்தையும் பரிமாறிக் கொள்வதற்கு சிறந்த தொழில் முனைவோர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வழக்குநர்களை ஒன்றிணைக்கும் தளமாக இம்மாநாடு நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசின் ஆதரவோடு நடைபெறும் இந்திய பசுமை கட்டட மாநாடு கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட புத்தாக் கமான பசுமை தயாரிப்புகள், கட்டட பணிக்கான மூலப் பொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப் படுத்தப்படும் என இம்மாநாட்டின் இணைத் தலைவரும், அய்ஜிபிசி - சென்னை கிளையில் தலைவருமான அஜித் குமார் சோர்டியா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment