அனுமதிக்கப்பட்ட அளவைக்கடந்து பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டதால் சபரிமலையில் அரவணை பாயாச டின்களை அழிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

அனுமதிக்கப்பட்ட அளவைக்கடந்து பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டதால் சபரிமலையில் அரவணை பாயாச டின்களை அழிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடில்லி,நவ.4- சபரிமலை யில் அனுமதிக்கப்பட் டதை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப் பட்ட 6.65 லட்சம் அர வணை பாயாச டின்களை அழிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் அங்கு வழங்கப்படும் அர வணை பாயாசத்தை தங் கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்த அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக் காய் தரமானதாக இல்லை என கேரள உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத் தரவின்பேரில், ஏலக்கா யின் தரம் குறித்து திருவ னந்தபுரம் அரசு ஆய்வ கம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த ஆய்வின் அறிக் கையில் அரவணை ஏலக் காய் தரமற்றது எனவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால் ஏலக்காய் பாதுகாப்பா னது அல்ல எனவும் தெரி விக்கப்பட்டது. இதை யடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் சபரிமலை யில் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட் டது.

இந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள 6.65 லட்சம் அர வணை டின்களை அப் புறப்படுத்தி அழிக்க கேரள அரசுக்கு உத்தர விட உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு அனு மதி கோரியது. பூச்சி மருந்து கலந்ததாக கூறப் பட்ட 6.65 லட்சம் அர வணை பாயாச டின்கள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டன.

அதன்பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனை யில் அரவணை சாப்பிடு வதற்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட் டது. அரவணை தயாரிக் கப்பட்ட 6 மாதத்திற்குள் அதனை பயன்படுத்தா விட்டால் அது உண்ண முடியாததாகிவிடும். ஆனால், தயாரித்து இரண்டு மாதங்கள் ஆன தால், இந்த அரவணையை விற்க மாட்டோம் என தேவசம் போர்டு நீதிமன் றத்தில் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரவணை தயா ரிக்கப்பட்டது என்று கூறி, விற்பனை நிறுத்தப் பட்ட அரவணையை அழிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரவணையை அழிக்க தேவசம் போர்டும், மாநில அரசும் ஒத்துழைக்க வேண் டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதை எப்படி, எங்கு அழிப் பது என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்ய லாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அரவணை விற்பனைக்கு தடை விதித்த கேரள உயர்நீதிமன்றத்தின் நட வடிக்கையையும் உச்சநீதி மன்றம் விமர்சித்துள்ளது. வணிக நலன் சார்ந்த விஷ யங்களில் உயர் நீதி மன் றத்தின் தலையீடு முறை யானதல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

No comments:

Post a Comment