வெப்பத்தைக் குறைக்கும் வெள்ளைக் காகிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

வெப்பத்தைக் குறைக்கும் வெள்ளைக் காகிதம்!

சாதாரண வெள்ளைக் காகிதம், ஏர் கண்டிஷனருக்கு போட்டியாக வர முடியுமா? முடியும் என்கிறது, அமெரிக்காவில், மாசாசூசெட்சில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக் கழக ஆய்வு. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைக் காகிதத்திற்கு, டெப்ளான் படலம் பூசி அதை கட்டடத்தின் கூரை முழுவதும் விரித்து ஒட்டிவிட்டனர். வெள்ளைக் காகிதம் சூரியக் கதிர்களை பெரும்பாலும் எதிரொளித்து திருப்பி அனுப்பிவிடுகிறது.

இதனால் கட்டடத்தின் மீது வெப்பம் ஏறுவது வெகுவாக குறைக்கப்படுகிறது. எந்த அளவுக்கு? வெளியே உள்ள வெப்பத்தைவிட, கட்டடத்திற்கு உள்ளே இருக்கும் வெப்ப நிலை 10 டிகிரி பாரன்ஹைட் அளவுக்கு குறைவாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காகிதத்தின் மீது பூசப்பட்டுள்ள டெப்ளான் பூச்சு, காகிதத்திற்கு விறைப்பையும், ஒட்டுவதற்குத் தேவையான பிடிப் பையும் தருகிறது. இருந்தாலும், இந்தக் காகிதத்தை மறுசுழற்சி செய்வதில் எந்த தடையும் இல்லை என்ற நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் வெள்ளை சுண்ணாம்புக்கு அடுத்து, இப்போது வெள்ளைக் காகிதம்!


No comments:

Post a Comment