துணை ராணுவத்தில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.அய்.எஸ்.எப்., ) காலியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: தடகளம் 74, மல்யுத்தம் 47, பளு தூக்குதல் 28, பாடிபில்டிங் 14, குத்துச்சண்டை 10, கூடைப்பந்து 8, கால்பந்து 7, நீச்சல் 6 உட்பட மொத்தம் 214 இடங்கள் உள்ளன.
வயது: 1.8.2023 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தகுதி: பன்னாட்டு / தேசிய / பல்கலை / பள்ளிகள் இடையிலான தேசிய போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 28.11.2023
விவரங்களுக்கு: cisfrectt.cisf.gov.in
No comments:
Post a Comment