தயவு செய்து அசோக் கெலாட்,
சச்சின் பைலட்டை தாக்கிப் பேசவேண்டாம்!
அமித் ஷாவை இடை மறித்து கோரிக்கை விடுத்த பாஜக வேட்பாளர்
ஜெய்ப்பூர், நவ.25 ராஜஸ்தானில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையின்போது உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பரப்புரைக்கான தனிநபர் குறித்த பேச்சு தொடர்பான விதிமுறைகளை மீறி கடுமையாகப் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அமித்ஷா எந்த வேட்பாளருக்காக வாக்கு சேகரித்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தாரோ அந்த வேட்பாளர் எழுந்து அமித் ஷாவைப் பார்த்து பேச்சை நிறுத்துமாறு கூறினார்.
சிறிதும் எதிர்பார்க்காத அமித்ஷா என்ன கூறுகிறாய் என்று கேட்க, ‘‘இந்த மேடையில் இம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மற்றும் சச்சின் பைலட் குறித்து இனி எதுவுமே பேசவேண்டாம்; அவர்கள் மதிப்பிற்குரிய நபர்கள்'' என்று கூறினார். அதுவும் ஒலிவாங்கியிலேயே அவர் கூறியதும், தனது கட்சி வேட்பாளரே காங்கிரசாரைப் பற்றிப் பேசவேண்டாம் என்று கூறியதை ஏற்கமுடியாமல், அமித்ஷா, அவமானத்தில் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.
No comments:
Post a Comment